அனைத்து ஊட்டச்சத்துகளும் சரிவிகிதத்தில்  ஒரு  நாளைக்கு எடுத்து கொள்ளும் உணவு தான் சரிவிகித உணவு. இன்று எடுத்து கொள்ளும் பல விதமான  டயட்  முறைகளில் இதுவும்  ஒன்று . மருத்துவ ரீதியாக  நிரூபணம் செய்ய பட்ட உணவு முறையாகும். இது டயட் மிகவும், எளிமையான அனைவராலும் எடுத்து கொள்ள கூடிய உணவு முறை ஆகும்.


ஒரு நாளைக்கு உடல் சீராக இயங்குவதற்கு, உடலுக்கு ஊட்டச்சத்துகள் தேவைப்படும். கார்போஹைட்ரெட், புரதம், கொழுப்பு,  வைட்டமின்கள்,தாது உப்புகள் தேவை. ஒவ்வொரு உணவில் ஒவ்வொரு மாதிரியான ஊட்டச்சத்துகளில் கூடுதலாகவும், குறைவாகவும் இருக்கும். இந்த அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்க தேவையான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். என்னனென்ன உணவில், என்ன மாதிரியான ஊட்டச்சத்துகள் நிறைந்து இருக்கிறது, ஒரு நாளைக்கு எவ்வளவு எடுத்து கொள்ள வேண்டும் என்பதில் தான் ஆரோக்கியம் ஒளிந்து இருக்கிறது.




கார்போஹைட்ரெட் - இது உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. நாள் முழுவதும் உடல் இயங்குவதற்கு மிகவும் அத்தியாவசியமான ஊட்டச்சத்து கார்போஹைட்ரெட்  ஆகும். இது  அரிசி,கோதுமை, போன்ற உணவுகளில்  அதிகம் கார்போஹைட்ரெட் ஊட்டச்சத்து நிறைந்து இருக்கிறது. நாள் முழுவதும் உடல் சோர்வு இல்லாமல் இயங்குவதற்கு இது அவசியம்.  இது எடுத்து கொள்ளும் மூன்று வேலை  உணவிலும், கார்போஹைட்ரெட் நிறைந்து இருக்கிறது.




புரதம் - இது தசைகள்  வலுவாகவும், சுறுசுறுப்பாக  இயங்கவும்,அத்தியாவசியமான ஊட்டச்சத்து ஆகும். இது பருப்பு, தானியங்களில் நிறைந்து இருக்கிறது. முளைகட்டிய  தானியங்கள், துவரம் பருப்பு, கடலை பருப்பு, நிலக்கடலை, கொண்டை கடலை என அனைத்திலும் புரத சத்து நிறைந்து இருக்கிறது. மூளைக்கு இயங்குவதற்கு தேவையான அனைத்தும் புரத சத்தில் இருந்து உடல் எடுத்து கொள்ளும். காலை மற்றும் மதிய உணவில் புரத சத்து எடுத்து கொள்வது நல்லது. குழந்தைகள் வளர்வதற்கும் இது அத்தியாவசியமான ஊட்டச்சத்து ஆகும்.




பழங்கள் - தினம் ஏதேனும் இரண்டு பழங்களை உணவில் எடுத்து கொள்ள வேண்டும். இதில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் நார்சத்து நிறைந்து இருக்கிறது. தினம் பழங்கள் எடுத்து கொள்வது,  சரும ஆரோக்கியத்திற்கும்,  உறுப்புக்கள் சீராக இயங்குவதற்கு தேவையான தனிமங்கள் அனைத்தும் பழங்களில் இருக்கிறது.


காய்கள் - ஆண்டிஆக்ஸின்ட்கள், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்து இருக்கிறது. தினம் இரண்டு  வகையான காய்கள் மற்றும் ஒரு கீரை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.




பால் - இதில் கால்சியம் சத்து நிறைந்து இருக்கிறது. பால் தயிர் போன்ற பால் பொருள்கள் தினம் எடுத்து கொள்ள வேண்டும். இதில் வைட்டமின் டி மற்றும் கால்சியம் சத்து நிறைந்து  இருக்கிறது.


கொழுப்பு - உடலுக்கு நல்லது செய்யும் கொழுப்பு சத்து அவசியம். அளவான கொழுப்பு சத்து உடலுக்கு அவசியம் ஆகும். அதனால், எண்ணெய் போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.




இதில் ஏதேனும் ஒன்று கூடுதலாகவோ, குறைவாகவோ எடுத்து கொண்டால்  உடல்  பருமன், ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்சனைகள்  வரும்.