முகம் பளபளப்பாகுவதற்கு கரித் தூளா என கேள்வி எழுப்பவர்கள் ஏராளம் இருக்கிறார்கள். ஏனென்றால் கரித்துளை பயன்படுத்தினால் கருப்பாகத்தான் மாறும் எவ்வாறு வெள்ளையாக மாறும் என கேள்வி எழுவதும் உண்டு.
தற்போதைய நவீன காலத்துக்கு ஏற்ற வகையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வரும் இந்த வாழ்க்கை முறையில், கரித்தூளை பயன்படுத்துவதால் முகம் அழகு பெறுகிறது மற்றும் சருமம் பளபளப்பாகிறது என கூறப்படுகிறது.
கரித்தூள்:
தேங்காய் மட்டைகள்,மரத்தூள், மரங்கள், அடுப்புக் கரி போன்றவற்றிலிருந்து இந்த கரி பெறப்படுகிறது. இந்த கரித் தூளை , முகச் சுத்தம் , ஃபேஸ் மாஸ்காக பயன்படுத்தினால் பல்வேறு நன்மைகள் கிடைப்பதாக அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
கரித்தூள் என்பது ஆதி காலம் தொட்டு கிராமப்புறங்களில் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வந்தது. பல் தேய்க்கும் ஒரு பொருளாகவும் இந்த கரித்தூள் பயன்படுத்தப்பட்டது. ஆனால் காலப்போக்கில் அதன் பழக்கம் இல்லாமல் போய்விட்டது. அந்தக் காலத்தில் வாழ்ந்த முன்னோர்களுக்கு வாய் சம்பந்தமான எந்த நோய்களும் வராமல், பற்களும் உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது.
தற்போது இந்த கரித்தூள் சரும அழகை பேணும் ஒரு பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி பார்த்தால் செயற்கையாக கிடைக்கும் எந்த பொருளுக்கும் இது ஈடு இணையற்றது என கூறப்படுகிறது. இயற்கையான முறையில் சரும பராமரிப்பை செய்ய விரும்புவோருக்கு இது மிகவும் உகந்த ஒரு அழகு சாதன பொருளாக இருக்கிறது.
கரித்தூள் சருமதுளைகளில் இருக்கும் அழுக்கை வெளியேற்றி சருமத்தை சுத்தம் செய்து முகத்தை பளபளப்பாக்கிறது. அடுப்பு கரியா? என கேட்பவர்கள் ஒரு முறையேனும் இதனை முயற்சி செய்து பார்த்தால் இதைவிட இயற்கையழகு எங்கும் கிடைக்காது.
இந்த அடுப்பு கரியை பதப்படுத்தி வேதிப்பொருட்கள் அதிகரிக்கப்பட்டு கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இது கடைகளில் சார்க்கோல் பீல் ஆஃப் மாஸ்க் என்றும் ஜெனரல் மாஸ்க் என்றும் இரண்டு வகையில் கிடைக்கின்றன.
இதில் கரியால் செய்யப்பட்ட ஜென்ரல் மாஸ்க் உபயோகிப்பதாக இருந்தால் கண்களை தவிர்த்து முகம் முழுவதும் பூசி 30 நிமிடங்கள் வரை காய வைத்து பின்னர் நீரில் கழுவலாம். பீல் ஆஃப் மாஸ்க் ஆக இருந்தால் அதை முகத்தில் போட்டு ஈரப்பதம் முழுவதுமாக காய்ந்ததும் உரித்து எடுத்துவிடலாம்.
இவ்வாறு இலகுவான முறையில் கரியால் செய்யப்பட்ட கலவையை நாம் கடைகளிலும் வாங்கிக் கொள்ளலாம். அதேபோல் இந்த கரித்தூளை பயன்படுத்தி வீட்டிலும் ஃபேசியல் செய்து கொள்ளலாம். கரி, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்கும் திறனைக் கொண்டுள்ளது, இதனால் ஃபேஸ் வாஷ், ஃபேஸ் ஸ்க்ரப், எக்ஸ்ஃபோலியேட்டிங் மாஸ்க்குகள் என பல வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. இறந்த சரும செல்களை அகற்றி பொலிவான சருமத்தை வழங்குகிறது.
சருமத்திற்கு தரும் ஸைன்:
சருமத்தை சுத்தப்படுத்த கரியை க்ளென்சராக பயன்படுத்தும்போது, இறந்த சரும செல்களை மென்மையான முறையில் ஸ்க்ரப் செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இது சருமத்தில் உள்ள வேண்டாத செல்களை அகற்றி விடுகிறது.
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் இந்த கரியானது, பல தோல் பராமரிப்பு நன்மைகளைக் கொண்டுள்ளது. சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்கும் திறனைக் கொண்டுள்ளது. கரியானது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டிருப்பதால் முகப்பருக்கள் வராமலும் வடுக்கள் ஏற்படாமலும் திறம்பட செயலாற்றுகிறது.
நச்சு நீக்கும் கரி ஃபேஸ் வாஷைப் பயன்படுத்துவது சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்றி, நன்கு ஒளிரும் தன்மையை கொடுக்கும். மேலும், கரியினால் செய்யப்பட்ட பீல் ஆஃப் மாஸ்க் சருமத் துளைகளை பெரிதாக்கி இறந்த செல்களை அகற்றி சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்துகிறது.
கறி ஃபேசியல் கலவையை வீட்டில் எவ்வாறு தயாரிப்பது?
நன்கு மென்மையான கரி வகைகளை தேர்வு செய்து ,அதனை மிகவும் நைஸாக தூள் செய்து கொள்ளவும். அதனை சலித்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்தக் கரித்தூளுடன் ஒரு பங்கு அளவு கல்சியம் குளோரைடு சேர்த்து ,மூன்று பங்கு அளவு தண்ணீர் விட்டு நன்றாக கலந்து பேஸ்டாகும் வரை கொள்ளுங்கள்.
பின்பு இந்த கலவையை ஒரு அகலமான தட்டில் ஊற்றி நன்கு காய வைக்க வேண்டும். நன்றாக காய்ந்ததும் அதனை துண்டு துண்டாக உடைத்து நீரில் அலசி எடுத்த பின்னர், ஓவனில் 30 நிமிடங்கள் வைத்து பேக் செய்ய வேண்டும். பின்னர் இதனை மீண்டும் நன்றாக பொடி செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
தொடர்ந்து ஒரு முட்டையின் வெள்ளை கருவை எடுத்து, அதில் போதுமான அளவு தேன் இட்டு நன்றாக பீட்டரில் அல்லது கையால் பேஸ்ட் ஆகும் வரை அடித்துக் கொள்ளவும். பின்னர் அதில் போதுமான அளவு கரித்தூளை இட்டு பேஸ்டாக கலந்து கொள்ளவும்.
செய்து வைத்த பேட்டை ஐந்து நிமிடங்கள் கழித்து முகத்தில் முழுவதுமாக தேய்க்க வேண்டும் பின்னர் 30 நிமிடங்கள் கழித்து நீரில் சுத்தமாக கழுவ வேண்டும். தொடர்ந்து முகத்தில் பளபளப்பை பெறுவதற்கு
கரித்தூளுடன் ஒரு டீஸ்பூன் பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில், களிமண், பேக்கிங் சோடா, கலந்து நன்றாக குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் முகம் நன்கு பளபளப்புடன் இருக்கும்.
சருமத்துக்கு பொலிவைத் தரும் இந்த கரி ,சருமத்தின் மூன்று அடுக்குகள் வரை ஊடுருவி உள் இருக்கும் நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. முகத்தை மிகவும் இளமையாக வைத்திருக்கும் இந்த கரி ஃபேசியல் இயற்கை முறையிலான, பாதுகாப்பான அழகு சாதன பொருளாகும். வாரத்துக்கு இரண்டு முறை மட்டுமே இதனை பயன்படுத்துவது மிகவும் சிறந்தது என நிபுணர்கள் கூறுகின்றனர். வறண்ட சருமம் இருப்பவர்கள் இதை அதிகம் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.