குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸ் உணவு தயாரிப்பது என்பது சற்று சாவாலானது. ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இருக்க வேண்டும் ருசியாகவும் இருக்கனும். சிலர் காய்கறிகள், கேரட், ப்ரோக்கோலி என சாப்பிடுவார்கள். சிலர், நூடுல்ஸ், பாஸ்தா என உள்ளிட்ட உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். அவர்களுக்கு ஏற்றவாறு வாழைப்பழம் பனீர் பராத்தா செய்து கொடுக்கலாம். 


என்னென்ன தேவை?


சப்பாத்தி மாவு செய்ய..


கோதுமை மாவு - ஒரு கப்


வாழைப்பழம் - 1


உப்பு - சிறிதளவு


வெல்லம் - ஒரு டீஸ்பூன்


தண்ணீர் - தேவையான அளவு


பராத்தாக்குள் வைக்க பூரணம்


துருவிய பனீர் - ஒரு கப்


துருவிய கேரட் - அரை கப்


மிளகாய் தூள் - 1/2 டீ ஸ்பூன்


சீரக தூள் - ஒரு டீ ஸ்பூன்


நெய் - தேவையான அளவு



செய்முறை


பராத்தாவிற்கு மாவு தயார் செய்ய வேண்டும். கோதுமை மாவு, மசித்த வாழைப்பழம், உப்பு, சிறிதளவு வெல்லம் சேர்த்து நன்றாக மாவு பதத்திற்கு பிசையவும். 


பாராத்தாவிற்குள் வைக்க தேவையான கலவையை தயார் செய்யவும். துருவிய பனீர், கேரட், மிளகாய் தூள், சீரக தூள்,உப்பு உள்ளிட்டவற்றை நன்றாக கலந்து வைக்கவும்.


கோதுமை மாவில் சிறியளவில் இந்த பனீர் கலவையை வைத்து சப்பாத்தி போல தேய்த்தெடுக்கவும். 


தோசை கல் சூடானதும், சப்பாத்தியை போட்டு, நெய் தடவி நன்றாக வெந்ததும் எடுத்து தயிர் உடன் சாப்பிடால் ருசியாக இருக்கும்.


பனீர் பராத்தா


பனீர் பலருக்கும் ஃபேவரைட். பனீர் வைத்து விதவிதமான டிஷ் செய்யலாம்.  பாலக்கீரை பனீர் பராத்தா செய்வது எப்படி என காணலாம்.


தேவையான பொருட்கள்


கோதுமை மாவு - இரண்டு கப்


பாலக்கீரை - ஒரு கப்


இளஞ்சூடான நீர் - ஒரு கப்


ஓமம் - ஒரு ஸ்பூன்


நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்


ஸ்டஃப்பிங்


பனீர் - 200 கிராம்


பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்


பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - ஒரு கைப்பிடியளவு


பச்சை மிளகாய பொடியாக நறுக்கியது - 1 


மிளகாய தூள் - 1 டீ ஸ்பூன்


உப்பு - தேவையான அளவு


செய்முறை


கோதுமை மாவில் வேக வைத்து அரைத்த பாலக்கீரை விழுது, உப்பு சேர்த்து  இளம் சூடான நீரை ஊற்றி சப்பாதி மாவு பதத்தில் தயார் செய்யவும். 20 நிமிடங்கள் ஊற விடவும். 


ஸ்டஃப்புங்கிற்கு பனீரை துருவி கொள்ள வேண்டும். அதோடு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம்  மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கி வைக்கவும். 


தயாராக வைத்துள்ள கோதுமை மாவில் சப்பாத்தி உருட்டி அதில் ஸ்டஃபிங்கை கொஞ்சம் வைத்து மீண்டும் தேய்த்தெடுக்கவும்.


மிதமான தீயில் தோசைக் கல்லில் கொஞ்சம் நெய் அல்லது எண்ணெய் தடவி சூடானதும் பனீர் பராத்தாவை போட்டு இரு புறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.


சுட சுட பாலக் பனீர் பராத்தா, தயிர், நறுக்கிய வெங்காயம் சேர்த்து சாப்பிடலாம்.


இந்த தயாரிப்பு போலவே பீட்ரூட், பட்டாணி, கீரை உள்ளிட்டவற்றை வைத்தும் பராத்தா செய்யலாம். சில குழந்தைகளுக்கு அவ்வளவாக சாப்பிட விருப்பம் இல்லாத காய்கறிகளை பராத்தாவாக செய்து கொடுக்கலாம். இதோடு தயிர் கொடுக்கலாம். லஞ்ச் பாக்ஸ் ஏற்ற உணவு.