கோவா சுற்றுலா செல்ல தயாராகி வருகிறீர்களா. அப்போ நீங்க என்னன்ன பயணத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என்று ஒரு லிஸ்ட் தயார் செய்து அதுக்கு தகுந்தாற் போல் லக்கேஜ் பேக் செய்ய வேண்டும். முதலில் கவனத்தில் கொள்ள வேண்டியது கோவாவின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப உங்களின் பொருட்களை பேக் செய்ய வேண்டும். பொதுவாக விடுமுறைக்காக சுற்றுலா பயணத்தை ஏற்பாடு செய்திருந்தால் அத்தியாவசிய பொருட்களை மட்டும் எடுத்து செல்வது சிறந்தது. ஆனால் கோவா போன்ற இடங்களுக்கு பயணம் செல்லும் போது கூடுதலாக சில விஷயங்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். அப்படி நீங்க பேக் செய்ய வேண்டிய சில பொருட்கள் பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.


 கோவாவின் கடற்கரையில் நீங்கள் உங்கள் பொழுதை கழிக்க விரும்பினால், தொப்பி உங்களை சூரிய ஒளியில் இருந்து உங்களை பாதுகாக்கும். அதற்கு சரியான சாய்ஸ் வைக்கோலால் செய்யப்பட்ட தொப்பி. அது பார்க்க பேஷன் ஆகவும் இருக்கும். இதனை தொடர்ந்து கோவாவில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு செல்ல அல்லது கடற்கரைக்கு செல்ல ரப்பர் காலணிகளை பயன்படுத்துவது வசதியாக  இருக்கும்.  ஸ்னீக்கர்கள் மற்றும் சாண்டல் எடுத்து செல்ல மறவாதீர்கள். பார்ட்டியில் கலந்து கொள்ள திட்டம் இருந்தால் பெண்கள் ஒரு ஜோடி ஹீல்ஸ் பேக் செய்யலாம்.





மேலும் கோவாவிற்கு முதல் முறை பயணிக்கிறீர்கள் என்றால் கோவாவின் மேப் கையில் இருப்பது அவசியம். சில சமயங்களில் நெட்வொர்க் பிரச்சனை இருந்தால் கூகுள் மேப் பயன்படாது. வரைபடம் தான் சிறந்த சாய்ஸ். இதனை கொண்டு நீங்கள் சொந்தமாக கோவாவை சுற்றி பார்க்கலாம். அதேபோன்று ஷாப்பிங் செய்யும் போது கோவாவின் தெருக்களில் பல பைகளோடு செல்வது கடினமாக இருக்கும். அதனால் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக வைக்க கூடிய டோட் பேக்குகள் போன்ற பெரிய பைகளை எடுத்து செல்வது நல்லது.





கடுமையான சூரிய கதிர்களால் உங்கள் சருமம் பாதிப்படையும். அதனால் மறக்காமல் SPF 50க்கு மேல் இருக்கும் சன்ஸ்கிரீன் பயன்படுத்தவும். இதை பயன்படுத்தி நீங்கள் சன் பாத் எடுத்துக் கொள்ளலாம். மேலும் சூரியனின் ஊதாக் கதிர்களில் இருந்து உங்கள் கண்களை பாதுகாக்க சன்கிளாஸ்கள் மிக முக்கியம். அழகான உடையில் அல்லது ஷார்ட்ஸில் நீங்கள் கோவாவின் தெருக்களில் நடக்கும் போது அல்லது கடற்கரையில் நீச்சல் உடையில்  அலையும் போது சன்கிளாஸை பயன்படுத்தினால் நீங்கள் மிகவும் ஸ்டைலாக இருப்பீர்கள்.





கோவாவில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்களையும் பார்வையிட திட்டம் இருந்தால் கையுடன் பவர் பேங் எடுத்து செல்லுங்கள். அது உங்கள் மொபைலின் பேட்டரியை சார்ஜ் செய்ய பயன்படும். குறிப்பாக அவசரத்திற்காக என்றுமே பயணம் மேற்கொள்ளும் போது மறக்காமல் முதலுதவி பெட்டியை எடுத்து செல்ல வேண்டும். துரதிருஷ்டவசமாக சில அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் இது உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். ஆனால் அதை பேக் செய்வதற்கு முன்னர் அதில் தேவையான அனைத்து அத்தியாவசிய மருந்துகளும் இருக்கிறதா என்று சரி பார்த்து கொள்ளவும். கோவா சுற்றுலா செல்வது மனத்தில் நீங்கா வண்ணம் இடம்பிடித்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.