தமிழ்நாட்டில் குளிர்காலம் தற்போது உச்சத்தில் இருக்கிறது. சென்னை ஊட்டியாகவும் ஊட்டி அண்டார்ட்டிக்காவாகவும் பேஸ்புக்கில் மாறிக் கொண்டிருக்கிறது. ஜெர்கின், ஸ்வெட்டர் விற்பனையும் ஜரூராக நடக்கிறது. எல்லாம் இருக்க உள்ளே செல்லும் உணவு ஆரோக்கியமானதாக பருவ காலத்திற்கு ஏற்றதாக இருப்பது அவசியமில்லையா? அதனால் தான் உங்களுக்காக குளிர் காலத்திற்கு ஏற்ற உணவுகளை பட்டியலிடுகிறோம்.


குளிர்கால உணவுகள்:


ஆப்பிள், பீட்ரூட், கேரட் உலர் பழங்கள் போன்றவை உங்களுக்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களை கொடுப்பதோடு நோயெதிர்ப்பு சக்தியையும் நீட்டிக்க வழிவகுக்கிறது. சில வகை உணவுகள் குளிர்காலத்தில் நம் உடலுக்கு கதகதப்பை அளிக்கிறது.


உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், முள்ளங்கி போன்ற குளிர்கால நட்பு உணவுகள் நமக்கு துணையாக செயல்படுகின்றன. இருமல், சளி மற்றும் பிற குளிர்கால நோய்களுக்கு எதிராக போராட அவை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.


வைட்டமின்கள்:


ஆரஞ்சு மற்றும் ஆப்பிள் போன்ற பழங்கள் குளிர்காலத்தில் சிறந்தது. ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ஆகியவை அதிகளவில் காணப்படுகின்றன. உங்களின் சாதாரண வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவுகிறது. ஆரஞ்சு பழங்களில் காணப்படும் வைட்டமின் சி சளி மற்றும் இருமலுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகிறது.மற்றொரு சிறந்த பழம் மாதுளை இதில் பாலிபினால்கள் அதிகம் (வீக்கத்தை எதிர்த்துப் போராடும் தாவர இரசாயனங்கள்) இதில் உள்ளன.


ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் குளிர்காலத்திற்கான சிறந்த 5 உணவுகளைப் பரிந்துரைத்துள்ளார்.






கரும்பு: குளிர்காலத்தில் கரும்பு உடலில் உள்ள நச்சுப் பொருளை வெளியேற்ற உதவும். இதில் வைட்டமின்கள் உள்ளன. வாரத்திற்கு மூன்று நாள் கரும்பு ஜுஸ் அருந்தலாம்.


பேர்:  இளந்தைப் பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவல்லது. குழந்தைகளுக்கு குளிர் காலத்தில் அவசியம் தர வேண்டும். சருமத்தையும் இது பளபளப்பாக வைக்கும்.


புளி: குளிர் காலத்தில் புளியை சேர்த்துக் கொள்வது நல்லது. இது உடலுக்கு புத்துணர்ச்சி தரும்.


நெல்லி: நெல்லிக்கனி உடலுக்கு உறுதி தரும். நோய் எதிர்ப்பு சக்தியை எதிர்க்கும்.


எள்: எள் சேர்த்துக் கொள்வதால் எலும்புகள் மூட்டு வலுப்பெறும்.