தமிழ் சினிமாவில் 80-களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை அருணா. கல்லுக்குள் ஈரம் என்னும் திரைப்படம் மூலமாக கோலிவுட்டில் அடியெத்து வைத்தவர் . தமிழ் தெலுங்கு உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்த அருணா திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார். தற்போது உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தும் நடிகை அருணா. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆரோக்கிய வாழ்விற்கு தான் மேற்கொள்ளும் விஷயங்கள் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் . அதில் ஒன்றுதான் கெமிக்கல் ஃபிரீ ஷாம்பு.
அந்த ஷாம்புவை செய்வதற்கு சோப் நட் , சிகைக்காய் , செம்பருத்தி இலை அல்லது பூ ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொள்ள வேண்டும் . அதன் பிறகு சந்தனம் , கரிசலாங்கன்னி , காயந்த ரோஜா பூ இவற்றை பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும் . அதன் பிறகு சோப்பு கொட்டையை உடைத்து அதன் விதையை எடுத்து விட வேண்டும் . அதனுடன் சுடு தண்ணீர் கலந்து வைத்துக்கொள்ளவும். அதோடு சிகைக்காய் மற்றும் செம்பருத்தி இலையை அரைத்து சுடு தண்ணீருடன் கலந்துகொள்ள வேண்டும். தற்போது நுரை நன்றாக வர தொடங்கும். இதனுடன் அரைத்து வைத்த பொடியை சேர்த்துக்கொள்ளலாம். வேண்டுமென்றால் வெந்தயத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.
இரண்டு வருடங்கள் வரை ஷாம்பு மற்றும் கண்டிஷ்னராக இதனை பயன்படுத்தலாம் என அருணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கியுள்ளார். அந்த வீடியோவை கீழே காணலாம்.