சர்வதேச புற்றுநோய் தினம் பிப்ரவரி 4 ஆம் தேதி ஆகும். தேசிய புற்றுநோய் தினம் நவம்பர் 7ம் தேதி ஆகும். புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை எடுத்துச் செல்வதே இந்த தினத்தின் நோக்கம் ஆகும்.


திரையுலகப் பிரபலங்களும், முக்கியப் பிரமுகர்களும் கூட புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்திருக்கிறார்கள். அப்படி உயிர்க்கொல்லி நோயான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த பிரபலங்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் அலசுவோம்.


சோனாலி பிந்த்ரே


தமிழில் 1999ம் ஆண்டு வெளியான திரைப்படமான காதலர் தினத்தில் கதாயாகியாக நடித்த சோனாலி பிந்த்ரே, மெடாஸ்டாசிஸ் (Metastasis) மாற்றிடம் புகல் நோயால் 2018ம் ஆண்டு பாதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து நிலைகுலைந்து போகாமல் அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக் கொண்டு புற்றுநோயை வென்றார். இவர், பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






சஞ்சய் தத்
மற்றொரு பிரபல நடிகரான சஞ்சய் தத், 2020 ஆம் ஆண்டில் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். எனினும், உரிய நேரத்தில் கண்டறியப்பட்டதால் மருத்துவ உதவியுடன் மீண்டு வந்தார் சஞ்சய் தத்.






தஹிரா காஷ்யப்
திரைப்பட இயக்குநரும், முன்னணி பாலிவுட் நடிகரான ஆயுஷ்மான் குரானாவின் மனைவியுமான தஹிரா காஷ்யப் 2018ம் ஆண்டு மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். உரிய மருத்துவ சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு வந்தார். அதன்பிறகு அவர் மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார். இவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வெறும் உடம்புடன் முதுகு தெரிவது போன்று புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இதில் கூச்சப்பட ஒன்றும் இல்லை. சிகிச்சையின் நடைமுறை இப்படிதான் இருக்கும் என்று கூறி அவரது புகைப்படத்தை வெளியிட்டார்.


லிசா ரே
மற்றொரு பாலிவுட் நடிகையான லிசா ரே, இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து உடைந்து போகாமல் அவர் 4 மாதங்கள் வரை கீமோதெரபி சிகிச்சை எடுத்துக் கொண்டார்.
ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சையும் செய்துகொண்டார். 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் இந்த அரிய புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தார்.


World Cancer Awarness Day : புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்னென்ன..? வராமல் தடுப்பது எப்படி..?


புற்றுநோய் என்றால் என்ன?


புற்றுநோய் (கேன்சர்) என்பது உடலின் செல்கள் மற்றும் திசுக்களை பாதிக்கும் ஒரு நோயாக கருதப்படுகிறது. புற்றுநோய் உடலின் எந்தப் பகுதியையும் பாதிக்கக் கூடும். ஆனால் பொதுவாக நுரையீரல் அல்லது செரிமான அமைப்பில் புற்றுநோய் பாதிப்பு உண்டாகிறது.


Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!


மார்பகம், இரத்தம், தோல், மூளை, எலும்பு, கணையம், கல்லீரல், கருப்பை வாய், கருப்பைகள், சிறுநீர்ப்பை, தைராய்டு சுரப்பி, நிணநீர் கணுக்கள், சிறுநீரகம், கண்கள், மூக்கு உள்ளிட்ட உடலின் மற்ற பகுதிகளிலும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. வாயிலும் புற்றுநோய் ஏற்படக்கூடும். புற்றுநோய் பரிசோதனை, சிகிச்சை மற்றும் தடுப்பு ஆகியவற்றில் ஏற்பட்ட முன்னேற்றங்களால் உயிர்வாழ்வு விகிதம் அதிகரித்து வருகிறது.


Healthy Food Habit :ரத்தத்தை சுத்திகரிக்கும் உணவுகள்! என்னன்னு தெரியுமா?


புற்றநோய் வராமல் தடுப்பது எப்படி


குறிப்பாக புகையிலைப் பொருட்களை உட்கொள்வது, மது அருந்தும் பழக்கம், அதிக உடல் எடையுடன் இருப்பது, குறைந்த அளவில் பழங்களையும் காய்கறிகளையும் உட்கொள்வது மற்றும் உடல் உழைப்பு இல்லாமை ஆகிய காரணங்களால் தான் புற்றுநோய் செல்கள் உருவாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிக கொழுப்புள்ள உணவுகளை தவிர்த்தல், உடற்பயிற்சிகள் செய்து தேக ஆரோக்கியத்துடன் இருத்தல்,  நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுதல் போன்றவை மூலம் புற்றுநோயைத் தடுக்க முடியும்.