அகமதாபாத்தைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான அபிர் இந்தியா நிறுவனம் நடத்திய கலை திருவிழா இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது. இதில், சிறப்பான படைப்புகளை காட்சிப்படுத்திய பத்து பேர் தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பையும், தலா 50 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. 


கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஆர்.எம்.பழனியப்பன், வாசுதேவன் அக்கிதம், கிறிஸ்டின் மைக்கேல், ஹார்ட்மட் வர்ஸ்டர் ஆகியோர் விழாவிற்கான நடுவர் குழுவில் இடம் பெற்றிருந்தனர். மிக்ஸ்டு மீடியா, லினோகட்கள், சிற்பங்கள், அக்ரிலிக் போன்ற பல்வேறு வடிவங்களில் படைப்புகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதில், மிகவும் திறமனையானவர்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கி இருக்கிறது அபிர் இந்தியா நிறுவனம்.


நாடு முழுவதும் உள்ள கலைஞர்களை ஊக்குப்படுத்தி வரும் அபிர் இந்தியா, இந்த கலை விழாவை கோலாகலமாக நடத்தி முடித்துள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் இதில் கலந்து கொண்டனர். வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் டாப்-10ல் இடம் பிடித்தனர். அபிர் இந்தியா சார்பாக இதுவரை 5 கலை விழாக்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் திறமையானவர்களுக்கு தொடர்ந்து பரிசு வழங்கி வருகிறது.


மேலும் பல முக்கியச் செய்திகளுக்கு:


















மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண