பல்வேறு ஆண்கள் தங்கள் பாலியல் செயல்பாட்டை அதிகரிக்கப் புதிய வழிகளைத் தேடி வருகின்றனர். தங்கள் இணையரைத் திருப்திபடுத்த புதிய வழிமுறைகளைத் தேடுபவர்களும் உண்டு; இருக்கும் வழிமுறைகளில் நிலவும் பிரச்னைகளைச் சரிசெய்ய விரும்புவோரும் உண்டு.
ஆண்களின் பாலியல் செயல்திறனை அதிகரிக்கும் பல்வேறு மருந்துகள் கிடைக்கின்றன. எனினும், மருந்துகள் இல்லாமலே பாலியல் செயல்திறனை அதிகரிக்கும் வழிகள் அதிகம் இருக்கின்றன. ஆணுறுப்பு என்பது நல்ல ரத்த அழுத்தத்தின் போது சிறப்பாகப் பணியாற்றுவதால், இதய நோய்களில் இருந்து தவிர்க்கும் அனைத்து முறைகளும் பாலியல் செயல்திறனை அதிகரிக்க உதவும். அதற்கான வழிமுறைகளை இங்கே அளித்துள்ளோம்.
1. சுறுசுறுப்பாக இயங்குவது
கார்டியோ உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்வது, பாலியல் செயல்திறனை அதிகரிக்கும். ஒவ்வொரு நாளும் குறைந்தது 30 நிமிடங்கள் வியர்வை வெளியேறும் வகையில் உடற்பயிற்சி செய்வது பாலியல் செயல்திறனை ஊக்கப்படுத்தும்.
2. பழங்களையும் காய்கறிகளையும் உண்பது
ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் காய்கறிகளையும் பழங்களையும் உண்ண வேண்டும். வெங்காயம், பூண்டு ஆகியவை ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் உணவுப் பொருள்கள். வாழைப்பழங்கள் ரத்த அழுத்தத்தையும் குறைக்கும் தன்மை கொண்டவை என்பதால் அவை பாலியல் செயல்திறனை அதிகரிக்க உதவி புரிகின்றன. இயற்கையில் விளையும் மிளகுப் பொருள்களுக்கும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் திறன் உண்டு.
3. இறைச்சி வகைகளை உண்பது
மீன்கள், ஆலிவ் ஆயில் முதலானவற்றில் கிடைக்கும் ஒமேகா 3 ஆசிட், வைட்டமின் பி1 நிறைந்த பயிறுகள், முட்டைகள் முதலானவை பாலியல் செயல்திறனை அதிகரிக்க உதவி செய்கின்றன.
4. மன அழுத்தத்தைக் குறைப்பது
மன அழுத்தம் உங்கள் ஆரோக்கியத்தை அதிகமாகப் பாதிப்பு ஏற்படுத்தும். இது இதயத் துடிப்பை அதிகரிப்பதால், ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. மேலும், இதனால் பாலியல் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. ஆணுறுப்பு விறைப்பதில் பிரச்னை, உச்சநிலையை அடைவதில் பிரச்னை முதலானவை மன அழுத்ததால் ஏற்படுகின்றன. தொடர் உடற்பயிற்சிகளால் மன அழுத்தத்தில் இருந்து மீளலாம். உங்கள் இணையருடன் மன அழுத்தம் குறித்து பேசுவதால், காதல் வாழ்க்கையில் அன்பு அதிகரிக்கும்.
5. போதை வகைப் பழக்கங்களைத் தவிர்ப்பது
புகை பிடித்தல், மது அருந்துதல் ஆகிய தீய பழக்கங்களும் பாலியல் செயல்திறனைப் பாதிக்கும் அம்சம் கொண்டவை. பாலியல் திறனை அதிகரிக்க விரும்புவோர் முதலில் இந்தப் பழக்கங்களைத் தவிர்ப்பது உதவிகரமாக இருக்கும். இந்தத் தீய பழக்கங்களுக்குப் பதிலாக, உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவுகளை உண்பது முதலான நல்ல பழக்கங்களைத் தொடங்குவது பாலியல் செயல்பாட்டை அதிகரிக்க உதவும்.
6. சூரிய வெளிச்சத்துக்கு உட்படுத்திக்கொள்வது
உடலில் உருவாகும் மெலடானின் சுரப்பியை உற்பத்தி செய்வதில் இருந்து சூரிய வெளிச்சம் தடுப்பை ஏற்படுத்துகிறது. மெலடானின் சுரப்பி தூக்கத்தை வரவழைக்க உதவி செய்கிறது என்ற போதும், அது பாலியல் வேட்கையை அமைதிபடுத்துகிறது. மெலடானின் குறைவாக உற்பத்தியாகும் போது, அதிகமாகப் பாலியல் திறன் தோன்றும். எனவே அதிகாலைகளில் சூரிய வெளிச்சம் பெறுவதும் பாலியல் திறனை அதிகரிக்கும்.
7. சுய இன்பம் மேற்கொள்வது
இணையரோடு நீண்ட நேரம் உடலுறவு மேற்கொள்ள விரும்பும் ஆண்கள், பயிற்சியாகச் சுய இன்பத்தில் ஈடுபடுவது பயனுள்ளதாக அமையும். எனினும், வேகமாக சுய இன்பம் கொண்டால் இந்தப் பலன் கிடைக்காது. பொறுமையாக நேரம் எடுத்து, சுய இன்பம் மேற்கொள்வது பாலியல் செயல்திறனைச் சரிசெய்யும்.
8. உங்கள் இணையருடன் நேரம் செலவு செய்தல்
செக்ஸ் என்பது இருபக்கமும் நிகழும் செயல்பாடு. உங்கள் இணையரோடு நேரம் செலவு செய்தல் என்பது, பாலியல் உறவின் போது மகிழ்வைத் தருவது மட்டுமின்றி, அதனை நீண்ட நேரம் செய்வதற்கும் உதவியாக அமையும்.
9. பாலியல் பிரச்னைகள் இருப்பின் மருத்துவரை நாடுவது
ஆணுறுப்பு விறைப்படையாமல் இருப்பது முதலான பாலியல் பிரச்னைகள் இருப்பின், தயங்காமல் மருத்துவரை நாடுவதும், அவரது ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது பாலியல் செயல்திறனை அதிகரிக்கும்.
உடற்பயிற்சிகள் செய்து, நல்ல உணவுகளை உண்டு, பாலியல் செயல்திறனை முழுமையாக அதிகரிப்பது நல்ல ஆரோக்கியத்தின் அடையாளமே!