குளிர்காலம், மழைகாலம் தொற்று நோய்கள் பரவுவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. இந்தக் காலத்தில் உடலில் அதிகமாக நோய் எதிர்ப்பு சக்தி தேவைப்படும் ஒரு சூழல். அதற்கேற்றவாறு நம்ம உணவு முறையும் இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியமாக இருக்க நோய் எதிர்ப்பு மண்டலம் சீராக செயல்பட வேண்டும். அதில் ஏதாவது மாற்றம் நிகழ்ந்தால் உடல்நலத்தில் கேடு ஏற்படும். நோய் எதிர்ப்பு மண்டலத்தின் சக்தியை ஒருநாளில் சிறப்பு வாய்ந்ததாக மாற்றிட முடியாது.


இதற்காக தனியே உணவு முறை வேண்டும். வாழ்வியல் முறை ரொம்பவே முக்கியம். நல்ல ஆரோக்கியமான உணவுமுறை, உடற்பயிற்சி என எல்லாவற்றையும் திட்டமிட வேண்டும். ஒருசில நாட்கள் அதை பின்பற்ற முடியாமல் போகலாம். ஆனாலும், தொடர்ந்து முயற்சித்து கொண்டே இருக்க வேண்டும். நோய் எதிர்ப்பு மண்டலம் சிறப்புடன் செயல்பட என்னெல்லாம் செய்ய வேண்டும் என நிபுணர்கள் சொல்லும் பரிந்துரைகளை காணலாம்.


ஆரோக்கியமான உணவுமுறை அவசியம்


 'we are what we eat' என்று ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் உண்டு. நாம் என்ன உணவு சாப்பிடுகிறோமோ அதுவே நாம்’ என்று சொல்வது. ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் மட்டுமே ஆரோக்கியமான சருமம், முடி வளர்ச்சி, பளபளப்பான சருமம் என பெற முடியும். இப்படியே நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு தேவை. என்ன சாப்பிடுகிறோமோ அது நோயை எதிர்த்து போராடும் சக்தியை தருகிறது. 


Harvard School of Public Health வெளியிட்ட ஆய்விதழில் இது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. உணவில் உள்ள மைக்ரோ நியூட்ரியன்ஸ், வைட்டமின், மினரல்ஸ் என எல்லாமும் இருக்க வேண்டும். அதுவே நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக செயல்பட உதவும். உணவு பழக்கத்தில் செய்ய கூடாதவைகள் என்று சிலவற்றை ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். 


காலை உணவை தவிர்க்க கூடாது


காலை உணவை அரசனைப் போல சாப்பிட வேண்டும் என்று சொல்வதுண்டு. நீண்ட நேர இடைவேளைக்கு பிறகு சாப்பிடும் உணவு அன்றைய நாளுக்கான ஆற்றலை வழங்கும். எந்த காரணத்திற்காகவும் காலை உணவை சாப்பிடாமல் இருக்காதீர்கள். நிறைய ஊட்டச்சத்து இருக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும்.


போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்


நல்ல டயல் பின்பற்றுபவர்கள் கூட செய்யும் தவறு, போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதான். உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.


ஊட்டச்சத்து நிறைந்த உணவு


கார்போஹைட்ரேட், வைட்டமின் சி, ஏ, பி3. என எல்லா வகையான ஊட்டச்சத்துளும் நிறைந்ததாக இருக்கட்டும் உங்கள் உணவு. 


ஸ்நாக்ஸ் முக்கியம்


உணவுகளுக்கு இடையே ஸ்நாக்ஸ் சாப்பிடுவதும் கொஞ்சம் முக்கியம். முழுமையாக சாப்பாடு மட்டுமே சாப்பிடுதும் நல்லதல்ல. ஸ்நாக்ஸ் பிரேக் இருப்பதும் முக்கியம். ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் சாப்பிடுவது நல்லது. காலை உணவாக இட்லி, சாம்பார் சாப்பிடுகிறீர்கள் என்றால் 11 மணி போல ஏதாவது பழங்கள், ஒரு கப் வேர்க்கடலை, கொண்டைக்கடலை என தானிய வகைகளாகாவும் ஸ்நாக்ஸ் சாப்பிடலாம். இல்லையெனில் அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற நிலை ஏற்படும்.


உணவுமுறையில் நல்ல மாற்றங்களை கொண்டுவர வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் விதமான உணவுகளை திட்டமிட்டு சாப்பிடுங்கள்.