வாஸ்து சாஸ்திரத்தின்படி வீட்டில் மூங்கில் செடி வைப்பது மிகவும் நல்லது. அதிர்ஷ்டம் தரக்கூடியதும் கூட. மூங்கில் செடிகள் நல் அதிர்ஷ்டம் கொண்டு வருவதோடு பண செழிப்பையும் தரும் எனக் கூறுகிறது வாஸ்து சாஸ்திரம். அதனால் வீடு, பணியிடம் என எல்லாவற்றிலும் மூங்கில் செடி வைக்கலாம். வாஸ்து சாஸ்திரம் மூங்கில் செடி வைப்பதற்கு பல்வேறு நன்மைகளை சுட்டிக்காட்டுகிறது. அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்.


நேர்மறை விளைவைத் தரும்:


4 தண்டுகள் உள்ள மூங்கில் செடியை வைத்து அது வீட்டிலிருந்து எதிர்மறை சக்திகளை வெளியேற்றும். மேலும் உங்களுக்குள் நேர்மறை சிந்தனையைத் தூண்டி நல்ல செல்வத்தை பெறச் செய்யும். இந்த செடிகள் பணத்திற்கும் புகழுக்கும் பெயர் போனவை. அதனால் நீங்கள் உங்கள் வீட்டிலோ அலுவலகத்திலோ மூங்கில் செடி வைத்தால் அது நல்ல நேர்மறை விளைவுகளையு, செல்வத்தையும், வளர்ச்சியையும் தரும்.


குட்லக் சார்ம்


நம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு பொருள் குட்லக் சார்ம் பொருளாக இருக்கும். சிலருக்கு பேனா. சிலருக்கு பர்ஸ். சிலருக்கு வாகனம். சிலருக்கு ஆடை இன்னும் சிலருக்கு குறிப்பிட்ட ஒரு ஊர் என பல விஷயங்களும் குட்லக் சார்மாக இருக்கும். அப்படி இந்த மூங்கில் செடி அதை வைத்திருப்பவர் யாராக இருந்தாலும் அவருக்கு குட்லக் சார்ம் ஆகிவிடும். நல்ல செல்வமும், புகழும் தரும். அதனால் யோசிக்காமல் உங்கள் வீட்டுக்கோ இல்லை அலுவலகத்திற்கோ மூங்கில் செடி வாங்கி விடுங்கள்.
 
வீட்டுச் சூழலுக்கு புத்துணர்ச்சி தரும்:


மூங்கில் செடியானது பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டது. இதனை இண்டோர் ப்ளான்ட்டாக உங்கள் வீட்டில் வைக்கும் போது அது வீட்டில் உள்ள காற்றை சுத்திகரிக்கும். இயற்கையான கிருமி நாசினியாக செயல்படும். சுற்றுவட்டாரத்தை சுகாதாரமாக வைத்திருக்க உதவும்.


பராமரிப்பது எளிது


வீட்டினுள் வைக்கக் கூடிய மூங்கில் செடியானது பல்வேறு நன்மைகளையும் கொண்டதாகும். இது ஈரமில்லாத வளமான மண்ணில் நன்றாக வளரும். இவற்றிற்கு குறைந்த அளவு சூரிய ஒலியே போதுமானதுதான். அதனால் இவற்றை வீட்டின் படுக்கையறையில் கூட வளர்க்கலாம்.
 
அலங்காரப் பொருள்


மூங்கில் செடிகள் வீட்டினுள் வைக்கும்போது சிறந்த அலங்காரப் பொருளாக இருக்கும். இவற்றை வீடு, அலுவலகங்களில் அலங்காரப் பொருளாகவும் பயன்படுத்தலாம். புல் வகையைச் சேர்ந்த மூங்கில் பார்க்க பசுமையாக இருப்பதாலேயே மனதில் இனிமை சேர்க்கும். 


நன்மைகளை அனுபவிக்க, நீங்கள் இந்த செடியை எங்கு வைக்கிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். வாஸ்து மற்றும் ஃபெங் சுய் இரண்டின் படி, வீட்டின் சில பகுதிகளில் மூங்கில் வைப்பது அதிக நன்மை பயக்கும். மூங்கிலை உங்கள் வீட்டின் நுழைவாயிலுக்கு அருகில் வைக்க வேண்டும். 


மூங்கில் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி ஆக்ஸிஜனை உருவாக்கும் திறனுக்காக அறியப்பட்ட ஒரு காற்று சுத்திகரிப்பு ஆலை ஆகும். எனவே, இதை வீட்டிற்குள் ஒரு தொட்டியில் வைத்தால், சுவாசிக்க சுத்தமான காற்று கிடைக்கும். மூங்கில் பென்சீன் போன்ற மற்ற நச்சுகளின் காற்றையும் சுத்தப்படுத்தும். இது உங்கள் படுக்கையறை அல்லது வீட்டின் வேறு எந்த அறைக்கும் ஒரு சிறந்த தாவரமாக அமைகிறது.