பிப்ரவரி வந்துவிட்டாலே காதலர்களுக்கு மனசு படபடத்துக் கொள்ளும். புதிதாக காதலை சொல்லப் போகும் நபர்களுக்கு கேட்கவே வேண்டாம். ரொமாண்டிக்கா காதலை சொல்லணும், கோபம் வராமல் சொல்லணும், நாசுக்கா சொல்லணும், வித்தியாசமா சொல்லணும் அப்படி இப்படின்னு மனசு அலை பாயும்.
எப்படிச் சொல்வதாக இருந்தாலும் மூன்று விஷயம் கட்டாயம் இருக்கும். ரோஸ், சாக்கலேட், கிஃப்ட். இப்ப நாம இந்த வேலன்டைன்ஸ் டேவில் உங்கள் காதலுக்குரியவருக்கு கொடுக்கக் கூடிய கிஃப்டை பரிந்துரைக்கிறோம். நீங்கள் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
ஃப்ளோரல் நகைகள்:
பட்ஜெட் கம்மி, இது ஃப்ளோரல் டிசைன் நகைகள். டாடாவின் தனிஷ்க் ஜுவல்லரி நிறுவனம் மியா என்ற பெயரில் இந்த ஃப்ளோரல் வகை நகைகளை அறிமுகம் செய்துள்ளது. அதுவும் இவை அறிமுகம் செய்துள்ள கம்மல் வகைகள் அட்டகாசம்.
The Alphabet Affair
அட பெயரே தூக்குதே என்று யோசிக்கிறீர்கள்தானே. ஆம், பெயர் சொல்லும்படி இது ஆங்கில எழுத்துக்களால் ஆன நகைகளின் கலெக்ஷன். குறிப்பாக செயினுக்கான டாலர் எனப்படும் பென்டன்டுகள். உங்கள் காதலி அல்லது காதலர் பெயரின் முதல் எழுத்து பென்டன்ட்டுடன் லவ் ப்ரோபோஸ் பண்ணிப் பாருங்களேன்.
ரிங் ஏ ஃப்ளிங்!
ரைமிங்கா இருக்குல. இதில் வருவது எல்லாம் மங்கள்சூத்ரா மோதிரங்கள். வடக்கே மங்கல்சூத்திரா என்றால் மாங்கல்யம். இந்த வகை மோதிரம் பெயர் ரைமிங்கா இருப்பது போல் கிஃப்டா கொடுக்க டைமிங்காகவும் இருக்கும். காதலைச் சொல்லும்போதே அது திருமணத்தில் தான் முடியும் என்ற உறுதியுடன் சொல்வது எவ்வளவு ஆழமானதாக இருக்கும்.
பிரேஸ்லெட் சார்ம்!
என்ன சுருக்கமா இருக்கு என்று யோசிக்கிறீர்களா. ஜாகத்தை நம்பாதவர்கள் கூட ராசிக்கல்லை அழகுக்காக போட்டுக் கொள்வது உண்டு. உங்கள் காதலியின் சன் சைன், மூன் சைன் தெரிந்து கொண்டு அவற்றிற்கு ஏற்ப இந்த ப்ரேஸ்லெட் வகைகளைப் பரிசாகக் கொடுக்கலாம்.
தி வேலன்டைன்ஸ் டேஸ் ஸ்பெஷல்
தனிஷ்கின் மியாவில் இன்னொரு ஸ்பெஷல் ஐட்டமும் உள்ளது. அதுதான் காதணியும், செயின் பென்டென்ட்டும் இணைந்து அமையப்பெற்ற நகை. இதைக் கூட நீங்கள் ட்ரை பண்ணி பார்க்கலாமே.
இந்தப் பரிசுடன் நீங்கள் காதல் சொல்ல சில கவிதைகளையும் உங்களுக்காக எடுத்துக் கொடுக்கிறோம்..
தொலைதூரம்
நீ போனால்
உன்னை தேடி
வெகுதூரம் பயணிக்குறது
உள்ளம்..
காதல் பிடிக்குள்
சிக்கி காற்றும்
திணறுகிறது
கொஞ்சம் இடைவெளிவிடு
பிழைத்துப்போகட்டும்...
உன்னருகில்
உன் நினைவில
மட்டுமே
என் மகிழ்ச்சியெல்லாம்...