பாலின சமத்துவம் பற்றி நாம் நிறைய பேசுகிறோம். பாலின சமத்துவமே நாகரிகத்தின் அடையாளம். இருந்தாலும் கூட உடல் வாகு ரீதியாக சில விஷயங்களில் ஆண்களும், பெண்களும் சமமற்றவர் என்பது இயல்பாக உள்ளது. ஆண்களுக்கு பெண்களைவிட கட்டுமஸ்தான தசை கட்டமைப்பு உண்டு. ஆண்களால் பெண்களைவிட வேகமாக ஓட இயல்கிறது. ஆண்கள் பெண்களைவிட அதிக எடையை தூக்குகின்றனர். இருப்பினும், ஆண்களைவிட பெண்களே அதிக வயது உயிருடன் இருக்கின்றனர். இதற்கு 5 முக்கிய காரணங்களைப் பட்டியலிடுகிறது ஹார்வர்டு பல்கலைக்கழகம்.
XY and XX மரபணு:
ஹார்வர்டு மருத்துவ பல்கலைக்கழகம் ஆணும், பெண்ணும் கருவில் உருவான தருணத்தில் இருந்தே ஒருவொருக்கொருவர் வித்தியாசமானவர் என்று தெரிவிக்கின்றது. ஆண்கள், பெண்கள் என இருவருக்குமே 23 க்ரோமோஸோம்கள் தான் என்றாலும் கூட இந்த 23 குரோமோஸோம்களில் 22 இருவருக்கும் பொதுவானதே. 23 வது குரோமோஸோம் மட்டும் வித்தியாசமானது.
ஆண்களுக்கு XY குரோமோஸோம்களும், பெண்களுக்கு XX குரோமோஸோம்களும் 23வது குரோமோஸோமாக இருக்கின்றன. இந்த Y குரோமோஸோம் எக்ஸ் குரோமோஸோமைவிட மூன்றில் ஒரு பகுதி சிறியது. அதேபோல் எக்ஸ் குரோமோஸோமிலும் குறைந்த மரபணுக்களைக் கொண்டிருக்கும். அதேபோல் ஆண்களின் ஒய் குரோமோஸோம் நோய்களுடன் தொடர்புடையது. அதனால்தான் பெண்களைவிட ஆண்களுக்கு அதிகமாக நோய் வருகிறது.
ஆண்கள் ஹார்மோன்:
ஆண்களின் டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன்கள் வயதாக ஆக இதயத்தின் தசைகளை வழித்தெடுக்கும் தன்மை கொண்டது. இதனால் தான் ஆண்களுக்கு காலப்போக்கில் இதய நோய்கள் வருகின்றன. பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அவர்களை இதய நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. அதனாலேயே பெண்களுக்கு மிகவும் அரிதாக இதய நோய்கள் வருகின்றது.
ப்ரோஸ்டேட் சுரபி:
ஆண்களில் இனப்பெருக்க உறுப்பில் ப்ராஸ்டேட் சுரப்பி முக்கியமானது. இந்த சுரப்பி, சிறுநீரகப் பைக்கு கீழ் வால்நட் வடிவத்தில் அமைந்திருக்கிறது. விதைப் பையில் இருந்து விந்து அணுக்கள், பிரத்யேகக் குழாய் வழியாக இந்த சுரப்பிக்கு வரும். பெண்களுக்கு மார்பகம் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வருவது போல், ஆண்களுக்கு பிரத்யேகமாக வரக்கூடியது ப்ராஸ்டேட் புற்றுநோய்.
கொழுப்பு
வளர்சிதை மாற்றத்தைப் பொறுத்தவரை பெண்களுக்கு நல்ல கொலஸ்ட்ரால் அதிகம். இது இதயத்தை பாதுகாக்கும். பெண்களுக்கு இவை ஒரு டெசிலிட்டரில் 60.3 மில்லிகிராம் இருக்கும். ஆனால் ஆண்களுக்கு இது 48.5 மில்லிகிராம் தான் இருக்கும்.
செயலாற்றல்:
ஓர் ஆய்வின்படி பெண்களின் உணவுப் பழக்கவழக்கங்களை ஆண்களின் உணவுப் பழக்கவழக்கங்களைவிட ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதனாலேயே பெண்கள் ஆண்களைவிட மருத்துவ ரீதியாக ஆரோக்கியமானவர்களாகக் கருதப்படுகிறார்கள். வீட்டு வேலையையும் பார்த்து அலுவலக உத்தியோகத்தையும் பார்த்து பெண்களால் சுழன்றடிக்க முடியக் காரணமும் அவர்கள் பெண்கள் என்பது மட்டுமே.
கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் தலைவிரித்து ஆடியபோதும் மிக அதிகமாக உயிரிழந்தோர் ஆண்கள் தான். ஆனால் கொரொனா ஆண்களையே அதிகம் பாதிக்குமா என்பது குறித்து இதுவரை அறிவியல் ரீதியாக மெய்ப்பிக்கப்பட்ட எந்த ஒரு தரவும் இல்லை என்றாலும் கூட வெறும் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்த்தால் கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண்களின் எண்ணிக்கையை விட ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை. இது உலகம் முழுமைக்குமான ஒப்பீட்டு அளவும் கூட.