பணியிடத்தில் சிலருக்கு மட்டும் எப்போதும் அதிகம் மரியாதை இருக்கிறது என்றும், நமக்கு ஏன் அப்படி இல்லை என்றும் புலங்காகிதம் அடைகிறீர்கள். அதை முதலில் நிறுத்துங்கள். முதலில் உங்களை உள்ளார்ந்து கேள்விகளுக்கு உட்படுத்துங்கள். அந்தக் கேள்விகளுக்கு விடை கிடைத்தால் நீங்களும் வெற்றியாளரே.


உங்களை அலுவலகத்தில் தனித்துவத்துடன் வைத்துக் கொள்ள இந்த 5 விஷயங்களைப் பின்பற்றுங்கள்.


உங்களைப் பற்றி நல் அடையாளம் உருவக்காங்குள். அலுவலகத்தில் உங்களுக்கு என்று ஒரு நல் அடையாளத்தை உருவாக்குங்கள். நீங்கள் யாரிடம் பேசினாலும் கண்ணோடு கண் பார்த்துப் பேசுங்கள். உங்கள் உடல் மொழியும் உள்ள மொழியும் ஒன்றாக இருக்க வேண்டும். நிற்கும்போது நேராக நிமிர்ந்து நில்லுங்கள். புன்னகையை எப்போதும் மறக்காதீர்கள்.


உங்கள் சக பணியாளர்களுக்கு உதவியாக இருங்கள்:


உங்கள் சக பணியாளர்களுக்கு எப்போதும் உதவியாக இருங்கள். உங்களுக்கு தெரிந்த அலுவல் விஷயங்களை அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். நிபுணத்துவங்கள் மூலம் அதனை பளிச்சிட செய்யுங்கள். மற்றவர்களிடம் நல் எண்ணத்தை சம்பாதியுங்கள். உங்கள் சக பணியாளருக்கு உதவியாக இருங்கள். 


வளைந்து கொடுங்கள்:


பணி நேரம் முடிந்ததும் விட்டாச்சு வேலை என்று ஓட்டம் பிடிக்காமல் சற்று நேரம் இருந்து சில வேலைகளை கூடுதலாக செய்யுங்கள். உங்களுக்கான டெட்லைன்களை கையாள அந்த எக்ஸ்ட்ரா நேரம் உதவும். 


சரியாக உடுத்துங்கள்:


ஆள் பாதி ஆடை பாதி என்பது உண்மையான கருத்து. உங்கள் அலுவலகத்திற்குச் செல்லும் போது அதற்கேற்ற நல்ல ஆடைகளை அணிந்து செல்லுங்கள். முதலில் அது உங்களுக்கு சவுகரியமானதாக இருக்க வேண்டும். இரண்டாவது அது உங்கள் தோற்றத்தை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும். சில நேரங்களில் அலுவலகங்களுக்கு க்ராப் டாப் அணிந்து செல்வீர்களானால் அது உங்களுக்கு அசவுகரியமாக அமையலாம். உங்கள் பணிக்கு ஏற்ற ஆடையை பணியிடத்துக்கு அணிந்து செல்லுங்கள்.


சுவாச ஆரோக்கியம் முக்கியம்:


அலுவலகத்தில் நீங்கள் சக ஊழியர்களிடம், உயர் அதிகாரிகளிடம் பேச வேண்டியிருக்கும். அதனால் வாய் சுகாதாரத்தைப் பேணுங்கள். ஒரு முக்கியமான நபருடன் பேசப் போகிறீர்கள் என்றால் மவுத் ஃப்ரெஷ்னர் பயன்படுத்துங்கள். முக்கியமாக பூண்டு, வெங்காயம் போன்ற பொருட்களை உபயோகிக்காதீர்கள்.


அலுவலகத்தில் மிகவும் இளைய அல்லது உங்களைவிட மிகவும் குறைவான பணி அனுபவம் உடையவர்கள் தங்கள் மேலதிகாரியை ஒரு நண்பராக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். அவர்கள் அலுவலகத்தில் மேலதிகாரி, கீழ்நிலை பணியாளர் என்ற படிநிலைகளை அவர்கள் விரும்புவதில்லை. இளம் வயதினரின் மூன்றில் ஒரு பங்கினர் தங்கள் மேலதிகாரி அப்பதவிக்கு ஒரு முன்மாதிரியானவர் என்று நினைக்கவில்லை. அதற்கேற்றார் போல் உங்களை தகவமைத்துக் கொள்ளுங்கள்.


இந்த எளிமையான சில விஷயங்களைப் பின்பற்றுங்கள். அலுவலகத்தில் உங்களை நீங்களே சிறப்பாக முன்னிறுத்துங்கள்.