வாழைப்பழம் ஆரோக்கியம் நிறைந்தது நாம் அறிந்ததே. ஆனால், வாழைப்பழ தோல் சரும ஆரோக்கிய, தலைமுடி வளர்ச்சி ஆகியவற்றிற்கு உதவும். வாழைப்பழ தோல் வைத்து செய்யப்படும் ஃபேஸ் பேக் வகைகள் பற்றி காணலாம். 


வாழைப்பழ தோலில் ஆன்டி - ஆக்ஸிடண்ட், வைட்டமின், மினரல்ஸ் நிறைந்துள்ளன. இது சருமத்தை புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும். வாழைப்பழ தோல் கொண்டு வீட்டிலேயே தயரிக்கும் ஃபேஸ் பேக் எப்படி செய்வது என காணலாம். 


வாழைப்பழ தோல், தேன் ஃபேஸ் பேக்:


வாழைப்பழ தோல், தேன் சருமத்தை புத்துணர்சியுடன் வைக்க உதவும். இதிலுள்ள பொட்டாசியம், ஆன்டி-ஆக்ஸிடண்ட் நிறைந்தது. இது சருமத்தின் மாயிஸ்ட்ரை தக்கவைக்க உதவும். வாழைப்பழ தோலில் உள்ள பேஸ்டை எடுத்து அதில் தேன் சேர்த்து முகம், கழுத்துப் பகுதிகளில் தடவவும். 15-20 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இது சருமத்தை மிருதுவாக்க உதவும். 


வாழைப்பழ தோல், மஞ்சள் ஃபேஸ் பேக்:


முகப்பரு, கொப்பளங்களினால் ஏற்படும் தழும்புகள் ஆகியவற்றை போக்க இந்த ஃபேஸ் பேக் உதவும். வாழைப்பழ தோலில் உள்ள ஜெல்லை எடுத்து, அதோடு, மஞ்சள், ரோஸ் வாட்டர் சேர்த்து முகம்,. கழுத்திற்கு தடவலாம். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவலாம். வாரம் இரு முறை இப்படி செய்தால் சரும எரிச்சல், முகப்பரு ஆகிய பாக்டீரியல் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். 


வாழைப்பழ கற்றாழை ஃபேஸ் பேக்:


வாழைப்பழ தோல் உடன் கற்றாழை ஜெல் சேர்த்து முகத்திற்கு தடவி வந்தால் சரும் மிருதுவாகும். அதோடு, சரும செல்கள் ஆரோக்கியமாக இருக்கும். சருமம் பொலிவாக மிளிர வாரத்திற்கு இருமுறை இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தலாம். 


வாழைப்பழம் ஓட்ஸ் ஃபேஸ் பேக்:


சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க ஓட்ஸ்,வாழைப்பழ ஃபேஸ் பேக் சிறந்தது. வாழைப்பழ தோலில் உள்ள ஜெல்லுடன், ஓட்ஸ் அரைத்து சேர்த்து, இதோடு, பால், தேன் அல்லது ரோஸ் வாட்டர் கலந்து நன்றாக பேஸ்டாக மாற்றவும். இப்போது இதை முகம், கழுப்பு, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் தடவி மசாஜ் செய்யலாம். அல்லது பேக் போட்டு 20 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவலாம். க்ளியர் ஸ்கின் கிடைக்கும்.


வாழைப்பழ தோல் - எலுமிச்சை ஜூஸ் ஃபேஸ் பேக்:


வாழைப்பழ தோலில் உள்ள ஜெல் உடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து முகத்திற்கு தடவினால் பொலிவான முகம் கிடைக்கும். இதோடு சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்க்கவும். 10 நிமிடங்கள் மட்டுமே இந்த ஃபேஸ் பேக் போட வேண்டும். எலுமிச்சையில் வைட்டமின் சி உள்ளது. இது முகத்தில் உள்ள டார்க் ஸ்பாட்களை நீக்க வல்லது. 



பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.