எதை சாப்பிட்டால் சத்து கிடைக்கும், எந்த உணவில் எவ்வளவு ஊட்டச்சத்துகள் இருக்கிறது, எதை எப்போது சாப்பிட வேண்டும்,என கூகுளிடம் கேட்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த என்ன செய்ய வேண்டும். உடல் ஆரோக்கியமாக இருக்க என செய்ய வேண்டும் என கேள்விகள் பலரிடம் வர தொடங்கியுள்ளது. அதாவது, கொரோனாவிற்கு பின் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கியத்துவம் மாறி உள்ளது. அந்த வரிசையில், உணவு எடுத்து கொள்வதில் பெரிய மாற்றங்கள் நடக்கிறது என சொல்லலாம். உலர் பழங்கள் தினம் எடுத்து கொள்வதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைகிறது. இந்த உலர் விதைகளில் ஒன்றான சியா விதைகளை பற்றி தெரிந்துகொள்வோம்.
சியா விதைகளின் பயன்கள்
- சியா விதைகளில், ஒமேகா 3 அமினோ அமிலங்கள், வைட்டமின் பி 1 (தையமின் ), வைட்டமின் பி 2 , மற்றும் வைட்டமின் பி 3 (நியாஸின்), துத்தநாகம், சத்துகள் நிறைந்து இருக்கிறது.
- இதில் ஆண்டிஆக்ஸிடென்ட்கள் நிறைந்து இருக்கிறது.
- இதில் புரத சத்து நிறைந்து இருப்பதால், உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் தங்களின் உணவை இதை எடுத்துக்கொள்ளலாம் . இதனால், நீண்ட நேரம் பசி தாங்கும் மற்றும் மற்ற உணவுகளை எடுத்து கொள்ளவேண்டும் என்ற ஆசை இருக்காது.
- எலும்புகளை பலப்படுத்துகிறது.
- இதய நோய்கள் வராமல் தடுக்கும்.
- நீர்க்கட்டி பிரச்னை இருப்பவர்களுக்கு இதை எடுத்து, எடுத்துக்கொள்வதன் மூலம், ஹார்மோன் குறைபாடுகளைச் சரி செய்யலாம்.
இந்த சியா விதைகளை உணவில் பல்வேறு முறைகளில் எடுத்து கொள்ளலாம்.
- சியா விதைகளை 1/4 ஸ்பூன் எடுத்து 1/4 கப் நீரில் ஊற வைத்து, 20 - 30 நிமிடங்கள் கழித்து ஏதேனும் பழச்சாறுடன் கலந்து எடுத்துக்கொள்ளலாம்.
- சியா விதைகளை இரவு முழுவது பாலில் ஊறவைத்து காலை உணவில் மற்ற உலர் பழங்களுடன் சேர்த்து எடுத்து கொள்ளலாம் .
- பழ சாலடுகள் செய்யும் போது , டாப்பிங்காக மேலே தூவி எடுத்து கொள்ளலாம்.
- பிரட் தயாரிக்க போது பிரட் கலவையுடன் சேர்த்து பேக் செய்து எடுத்து கொள்ளலாம்.
- வீட்டில் செய்யும் உணவுகளில் , ஏதேனும் ஸ்பெஷல் ஸ்வீட் செய்யும்போது அதனுடன் சேர்த்துக்கொள்ளலாம். கேசரி, பாயசம் என எந்த ஸ்வீட் செய்தாலும், அதனுடன் சேர்த்து எடுத்து கொள்ளலாம்.
- டீயில் சியா விதைகளை சேர்த்து எடுத்து கொள்ளலாம். இரவில் படுக்கைக்கு முன் பால் குடிக்கும் பழக்கம் இருந்தால் பாலுடன் சியா விதைகளை சேர்த்து கொள்ளலாம். இப்படி பல்வேறு முறைகளில் சியா விதைகளை மற்ற உணவுகளுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம். இது அன்றாட ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்கிறது