திருச்சி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப்  டெக்னாலஜி ( National Institute of Technology) கல்லூரியில் பல்வேறு துறைகளில்  92 உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வருகின்ற செப்டம்பர் 24-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொழில்நுட்பத்தில் சிறந்த மாணவர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக கடந்த 1964-ஆம் ஆண்டில் தேசிய தொழில்நுட்ப கழகம் திருச்சிராப்பள்ளி தொடங்கப்பட்டது.  நாடு முழுவதும்  உள்ள 31 தேசிய தொழில்நுட்பக் கழகங்களில் இதுவும் ஒன்றாக செயல்பட்டுவருகிறது. இங்கு ஏறத்தாழ 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களுக்கான பாடத்திட்டங்களை பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பல்வேறுத் துறைகளின் கீழ் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த திருச்சி என்ஐடியில் 92  உதவிப்பேராசிரியர் பணியிடம் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பணிக்காக தகுதி, வயது மற்றும் எந்தெந்தத் துறைகளில் பணியிடம் காலியாக உள்ளது என்பது குறித்து அறிந்துக்கொள்வோம்


துறைவாரியாக உள்ள காலி பணியிடங்களின் விபரம்:


கட்டிடக்கலை ( Architecture – 4), கெமிக்கல் இன்ஜினியரிங்( 2), வேதியியல் (5), சிவில் இன்ஜினியரிங் (13), கம்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் ( 05), கம்யூட்டர் அப்ளிகேசன்( 7), Electrical &electrionics engineering (5), Electrionic and communication engineering,  Energy & Environment (3),  Humanities & social science (3),  Instrumentation & Control Engineering ( 4),  Management studies (3), Machanical Engineering (5), Matallurgical& Materical Engineering (08), Physics (02), Production Engineering -09


வயது வரம்பு: மேற்கண்ட பிரிவுகளில் கீழ் உதவிப்பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசின் விதிகளின் படி வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.


விண்ணப்பக்கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை:


திருச்சி என்ஐடியில் உதவிப்பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் சம்பந்தப்பட்ட துறையில் இளங்கலை, முதுநிலை, முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை www.nitt.edu என்ற அதிகார்ப்பூர்வ இணையதளத்தின் மூலம் செப்டம்பர் 24-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுப்பிரிவினருக்கு ரூ.1000, எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ரூ. 500 மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  



மேலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நபர்கள், விண்ணப்பத்தினை பிரிண்ட் அவுட் எடுத்து, the Registrar, NIT, Trichy – 620015 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாக அக்டோபர் 4-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் அனுப்பி வைக்கவேண்டும். இதோடு இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு மேற்கண்ட விபரங்களை  https://recruitment.nitt.edu/faculty2021/advt/1.1_short_No என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.