யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், பல்வேறு மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள 105 குரூப் ஏ மற்றும் குரூப் பி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஜூலை 17-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடவிவரங்கள்
இதில் மொத்தம் 105 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் உதவி இயக்குநர், ஸ்பெஷலிஸ்ட் கிரேடு III, சட்ட அதிகாரி, விஞ்ஞானி உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகள் அடங்கும்.
கல்வித் தகுதி
ஒவ்வொரு பதவிக்கும் கல்வித்தகுதி மாறுபடும். பொதுவாக, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் தொடர்புடைய துறையில் இளங்கலை பட்டம், முதுகலை பட்டம், பிஎச்.டி அல்லது மருத்துவத் துறையில் எம்பிபிஎஸ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில குறிப்பிட்ட பதவிகளுக்கு துறைசார்ந்த முன் அனுபவமும் அவசியம்.
ஊதியம்
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மத்திய அரசின் 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி, அந்தந்த பதவிகளுக்கான ஊதிய விகிதத்தின் அடிப்படையில் மிகச்சிறந்த மாத சம்பளம் மற்றும் இதர படிகள் வழங்கப்படும்.
தேர்வுமுறை
விண்ணப்பதாரர்கள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில், கல்வித்தகுதி மற்றும் முன் அனுபவம் கொண்டு தகுதியானவர்கள் முதலில் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். ஒருவேளை குறிப்பிட்ட பதவிகளுக்கு அதிகப்படியான விண்ணப்பங்கள் வந்தால், முதற்கட்டமாக எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு அதன் பின்னர் நேர்காணல் நடத்தப்படும்.
விண்ணப்பக்கட்டணம்
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.25 மட்டுமே. பெண்கள், எஸ்சி/ எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இக்கட்டணம் செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
முக்கியதேதிகள்
- ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி தேதி: ஜூலை 17 (இரவு 11:59 மணிவரை)
- சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்கக் கடைசி தேதி: ஜூலை 18
ஆர்வமுள்ளவர்கள் upsconline.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு UPSC தளத்தை அணுகலாம்.
https://cdn.testbook.com/1782465451569-UPSC%20Reccruitment.pdf/1782465444.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து பணியிடங்கள், பதவி பெயர், கல்வித் தகுதி, தேர்வு முறை, ஊதிய விவரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பெறலாம்.
