இந்திய விமானப்படையில் பொது சேர்க்கை மற்றும் என்சிசி சிறப்பு நுழைவுத் தேர்வுகளை பெர்மனன்ட் கமிஷன் மற்றும் ஷார்ட் கமிஷன் மூலமாக ( தொழில்நுட்பம் அல்லது தொழில்நுட்பம் அல்லாத பணிகள்) விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாள். எனவே ஆர்வமுள்ள இளைஞர்கள் உடனடியாக விண்ணப்பித்துக்கொள்ளவும்.


இந்திய விமானப்படையில் சேர்ந்துப் பணிபுரிய ஆசையில் இருக்கும் இளைஞர்களுக்கான அரிய வாய்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் அல்லாத பணியில் சேர்வதற்கான சுமார் 300 பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? தகுதி என்ன? என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.


இந்திய விமானப்படை பணிக்கானத் தகுதிகள்


காலிப்பணியிட விபரங்கள்:


SSC – 77


AE -129


Lgs- 39


நிர்வாகம் – 51


சட்டங்கள் - 21


மொத்த காலிப்பணியிடங்கள் - 317





கல்வித்தகுதி :


விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிறுவனங்களில் 10+2 அளவில் கணிதம் மற்றும் 


இயற்பியலில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.


ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் அல்லது தொடர்புடையத் துறைகளில் BE அல்லது B.Tech முடித்திருக்க வேண்டும் எனவேலைவாய்ப்பு அறிவிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:


மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இந்திய விமானப்படை பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், https://careerindianairforce.cdac.in அல்லது https://afcat.cdac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்படிவத்தைப் பெற்று ஆன்லைன் மூலமாக இன்றைக்குள் அதாவது டிசம்பர் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்றே கடைசி நாள் என்பதால் ஆர்வமுள்ள இந்திய இளைஞர்கள் உடனடியாக விண்ணப்பித்துக்கொள்ளுங்கள்.


விண்ணப்பக்கட்டணம்:


விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 250/- தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும்.


மேலும்  NCC சிறப்பு நுழைவுத் தேர்வர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.


AFCAT நுழைவுக்கான ஆன்லைன் சோதனை பல்வேறு மையங்களில் நடத்தப்படும்.


 தேர்வு முறை:


இந்திய விமானப்படை பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு, உடல் தகுதி மற்றும் மருத்துவத்தேர்வு நடைபெறும். இதோடு  எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு மற்றும் மருத்துவத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.


சம்பள விபரம்:


இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை ஊதியம் வழங்கப்படும். 


மேலும்  ரூ.15,500 MSP யும்,  கூடுதலாக  பணியின்  தன்மை மற்றும் நிலைநிறுத்தப்பட்ட இடம் ஆகியவற்றின் அடிப்படையில் சம்பள உயர்வு வழங்கப்படும்.


எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள இளைஞர்கள் உடனடியாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துப் பயன்பெறுங்கள்.