டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களுக்கு கூடுதலாக 41 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது தேர்வர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4
கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி, தமிழ்நாடு மாநிலம் முழுவதும் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை எழுத 20,37,101 பேர் விண்ணப்பித்தனர். அதில், 20,36,774 பேர் தேர்வை எழுத அனுமதிக்கப்பட்டனர். எனினும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை 4,45,345 பேர் எழுதவில்லை; 15,91,429 பேர் எழுதினர்.
Also Read: TN Rain: மக்களே கவனம்.! 5 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது : வானிலை புது அப்டேட்.!
சுமார் 16 லட்சம் பேருக்கான தேர்வு முடிவுகள், அக்டோபர் 28ஆம் தேதி அன்று வெளியாகின. அதே நாளில், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையும் 559 உயர்த்தப்பட்டது. இதன்மூலம் மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 9,491 ஆக அதிகரித்தது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் வரலாற்றிலேயே முதல்முறையாக குறைந்த நாட்களிலேயே வெளியிடப்பட்டன.
காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு:
இந்த தருணத்தில் தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக , மேலும் 41 பணியிடங்களை அதிகரித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தேர்வில் அதிக கட் ஆஃப் பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர் என்பதால், சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய நவம்பர் 21ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி டிஎன்பிஎஸ்சி அறிவித்தது.
எனினும் அதில் சிலர் முறையாக சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவில்லை. தொடர்ந்து தற்போது அவர்களுக்கு சான்றிதழ்களை மறு பதிவேற்றம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, குரூப் 4 தேர்வர்கள் தங்களின் சான்றிதழ்களை மீள் பதிவேற்றம் செய்ய இன்றே (டிசம்பர் 21) கடைசித் தேதியாக டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது.
இந்த நிலையில், குரூப் 4 பணியிடங்களை, மேலும் 41 அதிகரித்ததன் மூலம், 9,532 ஆக பணியிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.