தமிழ்நாடு காவல்துறையின் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கச் செய்யும் பிரிவுகளில் (BDDS) பணிபுரிய முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் துணை ராணுவப்படை வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக 

Continues below advertisement

இந்த ஆட்சேர்ப்பு ஒரு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் நடைபெற உள்ளது. தேவைக்கேற்ப காலக்கெடு நீட்டிக்கப்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான விவரங்களை கீழே காணலாம்

காலியிடங்கள் மற்றும் ஊதிய விவரம்

  • ஆய்வாளர் (BDDS) – முன்னாள் சுபேதார்/ சுபேதார் மேஜர் : 2 காலியிடங்கள் (ஊதியம்: ரூ.37,700 – 1,19,500)

    Continues below advertisement

  • உதவி ஆய்வாளர் (BDDS) – முன்னாள் நாயிப் சுபேதார் : 14 காலியிடங்கள் (ஊதியம்: ரூ.36,900 – 1,16,600)

  • தலைமை காவலர் (BDDS) – முன்னாள் ஹவில்தார்/ நாயக் : 43 காலியிடங்கள் (ஊதியம்: ரூ.20,600 – 65,500)

தகுதி அளவுகோல்கள்

  • வயது: 01.07.2025 அன்று 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

  • கல்வித் தகுதி: குறைந்தபட்சம் எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி.

  • தொழில்நுட்ப தகுதி: CME, புனே அல்லது NSG அல்லது BCAS நடத்தும் குறைந்தபட்சம் 6 வார BDD படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • அனுபவம்: இராணுவம் அல்லது துணை ராணுவப் படைகளில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி அனுபவம்.

  • சிறப்பு திறன்: இந்திய ராணுவத்தின் 261/262 CED பிரிவு, CME இன் EDD பிரிவு, NSG இன் BD பிரிவு, தேசிய வெடிகுண்டு தரவு மையம் (NBDC) அல்லது விமான நிலையங்களின் BD பிரிவுகளில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.

  • கூடுதல் திறன்: தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் BDD தொடர்பான பயிற்சி அளிக்கும் திறன்.

  • மருத்துவத் தகுதி: SHAPE-I.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்கள் சுயவிவரம் (Bio Data), கல்விச் சான்றிதழ்கள், டிஸ்சார்ஜ் புத்தகம், ஓய்வூதிய ஆணை, BDD தொடர்பான படிப்பு/அனுபவச் சான்றிதழ்கள் ஆகியவற்றின் நகல்களுடன் கூடுதல் காவல்துறை இயக்குநர், செயலாக்கம், மருதம், எண்.17, போட் கிளப் சாலை, இராஜா அண்ணாமலைபுரம், சென்னை – 600 028 என்ற முகவரிக்கு 31.10.2025க்குள் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.