தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் காலியாக உள்ள உதவி அறுவைச் சிகிச்சை நிபுணர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் ( Tamil Nadu Medical Service Recruitment Board - MRB) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு வரும் 24-ம் (24.04.2024) தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.
பணி விவரம்
உதவி அறுவைச் சிகிச்சை நிபுணர் (Assistant Surgeon (General))
மொத்த பணியிடங்கள் - 2553
வயது வரம்பு விவரம் :
இந்த பணியிடங்களுக்கு 01/07/2024-ம் படி 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். 37 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளின் விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
ஊதிய விவரம்:
இந்தப் பணியிடத்திற்கு ரூ.56,100 முதல் ரூ. -1,77,500 வரை மாத ஊதியமாக வழங்கப்படும். (Pay Matrix Level-22)
கல்வித் தகுதி
- அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து எம்.பி.பி.எஸ். (MBBS) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Madras Medical Registration Act, 1914 மருத்துவராக பதிவு செய்து பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
- 12- மாதங்கள் House Surgeon (CRRI) பணிகாலம் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்வு, தனிப்பட்ட நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்
விண்ணப்பிக்கும் முறை:
இதற்கு விண்ணப்பிக்க https://mrbonline.in/ - என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
பொதுப் பிரிவினருக்கு ரூ.1,000 ஆகவும் பட்டியலின/ பழங்குடியின பிரிவினருக்கு ரூ. 500 ஆகவும் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முக்கிய தேதிகள்
இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு https://www.mrb.tn.gov.in/pdf/2024/AS_Notification_150324.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு தொடர்பான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி :15.05.2024
மேலும் வாசிக்க..
Job Alert:ரூ.1.14 லட்சம் ஊதியம்; அரசு வேலை; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!
Job Alert:10-வது, டைப்ரைட்டிங் தேர்ச்சி பெற்றவரா? நீதிமன்றத்தில் பணி செய்ய வாய்ப்பு! முழு விவரம்!