Job Alert:கணினி பயன்படுத்த தெரியுமா? மாவட்ட சுகாதார அலுவலகத்தில் வேலை - விவரம் இதோ!

Job Alert: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை காணலாம்.

Continues below advertisement

திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் மாவட நல சங்கத்தின் (District Health Society) கட்டுப்பாட்டிலுள்ள தேசிய ஊரக நலவாழ்வு குழுமம் மையத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

Continues below advertisement

பணி விவரம்

Refrigeration Mechanic

உதவியாளர் தரவு உள்ளீட்டாளார்

அலுவலக உதவியாளர்

பன்முக உதவியாளர்

Dispensers 

கல்வித் தகுதி

  • மெக்கானிக் பணிக்கு Refrigeration Mechanic துறையில் ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓராண்டு கால அனுபவம் இருக்க வேண்டும்.
  • தரவு உள்ளீட்டாளர் பணிக்கு விண்ணப்பிக்க கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
  • அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பன்முக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க 8-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Dispensers  பணிக்கு விண்ணப்பிக்க D.Pharm படித்திருக்க வேண்டும். 

ஊதிய விவரம்

  • Refrigeration Mechanic- ரூ.20,000/-
  • உதவியாளர் தரவு உள்ளீட்டாளார் - ரூ.15,000/-
  • அலுவலக உதவியாளர் - ரூ.10,000
  • பன்முக உதவியாளர் - ரூ.300 / நாள் ஒன்றிற்கு.
  • Dispensers - ரூ.750 / நாள் ஒன்றிற்கு ..

வயது வரம்பு விவரம்

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகபட்சமாக 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பங்கள் நேரிலோ . விரைவு தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்பட வேண்டிய முகவரி 

நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதார பணிகள் மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society),
துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகம்,
54/5 சூரி தெரு,
திருவள்ளூர் மாவட்டம் -  602 001.

தொலைபேசி எண்: 044-27661562

திருவள்ளுர் மாவட்ட இணையதள முகவரி https://tiruvallur.nic.in/ -விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 19.02.2024

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2024/02/2024020817.pdf  - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும்.

நுண்ணுயிரியாளர் வேலைவாய்ப்பு

நாகபட்டினம் மாவட்டம் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலக கட்டுப்பாட்டில் இயங்கிவரும் பொதுசுகாதார ஆய்வகத்தில் காலியாக உள்ள ஒரு நுண்ணுயிரியாளர் பணியிடம் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பிட உள்ளது. இது தொடர்பாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது விவரங்களை காணலாம். 

பணி விவரம்

நுண்ணுயிரியாளர் (Microbiologist)

கல்வித் தகுதி

இதற்கு விண்ணப்பிக்க மைக்ரோபயோலாஜி துறை படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். கல்வித் தகுதி தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s3c203d8a151612acf12457e4d67635a95/uploads/2024/02/2024020882.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

ஊதிய விவரம்

இதற்கு மாத ஊதியமாக ரூ.40 ஆயிரம் வழங்கப்படும் 

விண்ணப்ப கட்டணம்

இதற்கு விண்ணப்ப கட்டணம் இல்லை என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சுயவிவர குறிப்புடன் தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட விண்ணப்பத்தை அஞ்சல் மூலமாகவோ நேரிலோ சமர்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

Executive Secretary,
District Health Society,
O/o Deputy Director of Health Services,
Collectorate 1st Entrance,
Nagapattinam-611003.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 20.02.2024

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s3c203d8a151612acf12457e4d67635a95/uploads/2024/02/2024020882.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.


 

Continues below advertisement