விழுப்புரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு மாணாக்கர்களின் நலன்கருதி தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் ஆசிரியர்களை நியமனம் செய்ய சென்னை, ஆதிதிராவிடர் நல ஆணையர் அவர்களின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

காலிப்பணியிடம் விவரம்:

  • முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் நிலையில் −10 காலிப்பணியிடங்கள்
  1. தமிழ்-1
  2. ஆங்கிலம் −1,
  3. கணிதம் -4,
  4. வணிகவியல்-3,
  5. உயிரியல்-1
  • கணினி பயிற்றுநர் -3 காலிப்பணியிடங்கள்

மாதாந்திர தொகுப்பூதியம்:

  • முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் நிலையில் – 18,000/-
  • கணினி பயிற்றுநர் நிலையில் −15,000/-

கல்வித் தகுதி மற்றும் முன்னுரிமை:

  • முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்கள்.
  • பள்ளி அமைந்துள்ள எல்லைக்குள் வசிப்பவர்கள் (இல்லையெனில்).
  • பள்ளி அமைவிட ஒன்றிய எல்லைக்குள் வசிப்பவர்கள் (இல்லையெனில்).
  • மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்கள் (இல்லையெனில்)
  • அருகாமையில் மாவட்டத்தில் வசிப்பவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்களிடமிருந்து எழுத்து மூலமான விண்ணப்பங்கள் நேரடியாகவோ / அஞ்சல் மூலமாகவோ உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன் விழுப்புரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

கால வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 24.06.2025 முதல் 26.06.2025 மாலை 05.00 மணிக்குள் விழுப்புரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாக சமர்ப்பிக்கப்பட வேண்டியது. மேற்படி கால நிர்ணயத்திற்கு பின்பு வரப்பெறும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர்  ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.