கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 50 உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியக் குடியுரிமையுடைய, கீழ்க்காணும் தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வர்கள், www.tncoopsrb.in என்ற இணையதளம் வழியாக Online மூலம் மட்டுமே 31.12.2025 அன்று மாலை 05.45 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு
குறைந்தபட்சம் 18 வயது நிறைவாகி இருக்க வேண்டும். 32 வயது உச்ச வயதாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும் இதில் விதிவிலக்குகள் உண்டு.
ஊதியம் எவ்வளவு?
ரூ. 32,020 – ரூ. 96,210
விண்ணப்பக் கட்டணம்
பிசி, எம்பிசி, பிற வகுப்பினர் – ரூ.500
எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி வகுப்பினர்- ரூ.250
தேர்வு எப்போது? எப்படி?
எழுத்துத் தேர்வு சென்னையில் மட்டுமே நடத்தப்படும். இந்தத் தேர்வு ஜனவரி 24ஆம் தேதி அன்று காலை 10 மணி வரை 1 மணி வரை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி
பட்டப்படிப்புக் கல்வித் தகுதியானது, 10ஆம் வகுப்பு + உயர்நிலைப் பள்ளி / பட்டயம் அல்லது அதற்கு இணையான படிப்பு + இளநிலை பட்டம் என்ற வரிசை முறையில் கல்வித் தகுக்கான தேர்ச்சியினைப் பெற்றிருக்க வேண்டும்.
கீழ்க்காண்பவை கூட்டுறவுப் பயிற்சியாகக் கருதப்படும்.
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் வழங்கப்படும் கூட்டுறவு பட்டயப்படிப்பு (Diploma in Cooperative Management).
சென்னை நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் மதுரை கூட்டுறவு மேலாண்மை நிலையம் மூலம் நடத்தப்படும் உயர் கூட்டுறவுப் பட்டய பயிற்சி (Higher Diploma in Cooperative Management).
பின்வரும் பட்டப் படிப்பு படித்தவர்கள் கூட்டுறவுப் பயிற்சி பெறுவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறார்கள்.
வைகுந்த் மேத்தா தேசிய கூட்டுறவு நிறுவனம், புனே வழங்கும் முதுநிலை வாணிப மேலாண்மை (கூட்டுறவு) பட்டம்.
பி.காம் (ஆனர்ஸ்) கூட்டுறவு
எம்.காம் (கூட்டுறவு)
எம்.ஏ (கூட்டுறவு)
பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும். கூட்டுறவில் முதுநிலை பட்டப்படிப்பு.
பி.ஏ கூட்டுறவு)
பி.காம் (கூட்டுறவு)
கூட்டுறவுப் பயிற்சியிலிருந்து விலக்குக் கோருபவர்கள், கணக்குப்பதிவியல் (Book Keeping), வங்கியியல்(Banking), கூட்டுறவு (Cooperation), தணிக்கை (Auditing) ஆகிய பாடங்களைப் படித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் இவர்களுக்கு கூட்டுறவுப் பயிற்சியிலிருந்து விலக்களிக்கப்பட மாட்டாது.
விண்ணப்பிப்பது எப்படி?
- https://www.tncoopsrb.in/application_reg.php?appId=1 என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
- அதில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை சரியாகப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
இதுகுறித்த மேலும் விவரங்கள் அடங்கிய முழு அறிவிக்கையை https://www.tncoopsrb.in/doc_pdf/FINAL%20TAMIL%20NOTIFICATION%20SRB%20DEC%202025%20(WEBSITE)_251212_003403.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.tncoopsrb.in/
தொலைபேசி எண்: 044-28364858