தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியானது. இதற்கு விண்ணப்பிக்க நாளையே (டிசம்பர் 11- ஆம் தேதி) கடைசி தேதி.


தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி:


தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி கடந்த 1921 ஆம் ஆண்டு முதல் நாடார் வணிக சமூக வியாபாார நிதி சேவைகளுக்காக  ஆரம்பிக்கப்பட்ட வங்கி, வணிக  மேம்பாட்டிற்காக தமிழ்நாடு மெர்க்கன்டைல் என்ற பெயருடன் செயல்பட்டுவருகிறது.


தற்போது இந்தியா முழுவதும் 509 கிளைகளையும், 12 பிராந்திய அலுவலகங்களையும், பதினொரு விரிவாக்கக் கவுண்டர்களையும், ஆறு மத்திய செயலாக்க மையங்களையும், ஒரு சேவை கிளை, 1094 ஏடிஎம்களையும் கொண்டு இயங்கி வருகிறது. மேலும் டிஎம்பி வங்கி இந்தியா முழுவதும் தனது கால்தடத்தை விரிவுபடுத்தி வருகிறது. 


ஓய்வு பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வங்கி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.


பணி விவரம்:


ஆய்வாளர் - Inspector


தகுதிகள் என்னென்ன?


இதற்கு விண்ணப்பிக்க தமிழ்நாடு மெர்க்கன்டைல் அல்லது பிற வங்கிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.


ஓய்வு பெறும் வங்கிப் பணியில் scale II, Scale III or Scale IV cadre என்ற பிரிவில் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும்.


விருப்ப ஓய்வு (Voluntary Retirement Scheme) பெற்றவர்களுக்கு இதற்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள். 


வயது வரம்பு விவரம்


30.06.2023 -ன் படி 61 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


பணிகாலம்


இது இரண்டு ஆண்டுகால பணி.


ஊதிய விவரம்


இந்த வேலைக்கு தேர்வு செய்யப்பட்டால் மாத ஊதியமாக ரூ.35,000/- ஆக வழங்கப்படும். 


தேர்வு செய்யப்படும் முறை:


இந்த வேலைவாய்ப்பிற்கு பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்களுக்கு நேர்காணல் அழைப்பு விடுக்கப்படும். நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 


இதற்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்ல்லை. 


விண்ணப்பிக்கும் முறை:


மேற்கண்ட ஆர்வமும், தகுதியும் உள்ளநபர்கள், https://www.tmbnet.in/tmb_careers -என்ற அதிகாரப்பூர்வ இணையத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.


முன்னதாக என்னென்ன விபரங்கள் கேட்டுள்ளனர், தகுதி போன்றவற்றை முழுமையாக படித்துத்தெரிந்துக்கொள்ள வேண்டும்.


விண்ணப்படிவத்தில் எந்த தவறும் இல்லாமல், என்னென்ன ஆவணங்கள் கேட்டுள்ளார்களோ? அவை அனைத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி - 11.12.2023


தமிழ்நாடு வேளாண் துறையில் வேலைவாய்ப்பு


தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தில் (Tamil Nadu Irrigated Agriculture Modernisation Project) பணி செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்


Marketing Specialist (Branding/ Packing)


கல்வித் தகுதி:


இதற்கு விண்ணப்பிக்க எம்.பி.ஏ. (MBA (Agri Marketing)/Master of Agri Business Management - Science/Engineering/Technology
(B.Sc./B.E/B.Tech) அல்லது பி.எஸ்.சி., பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


சம்பந்தப்பட்ட துறையில் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். 


ஊதிய விவரம்:


இந்தப் பணியிடத்திற்கு ஊதியம் மற்றும் பணிநேரம் பயண தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வு செய்யும் முறை:


எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் இதற்கு தேர்வு செய்யப்படுவர். 


விண்ணப்பிக்கும் முறை:


இதற்கு தேவையான ஆவணங்களின் நகல்களுடன் சுயவிவர குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தை அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி 


The Managing Director, TNSFAC


Agricultural Marketing and Agri Business,


Guindy, Industrial Estate,


Chennai – 600 032.


இ- மெயில் : tnsfac2023@gmail.com


தொடர்புக்கு.. 044 – 22253884, 22253885


இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.agrimark.tn.gov.in/includes/downloads/TNIAMP2.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி - 15.12.2023