வருமான வரி துறை அலுவலகத்தில் உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பணி விவரம்


Young Professional 


பணியிடம்


சென்னை


கல்வித் தகுதி


இதற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகரித்த பல்கலைக்கழகம், கல்வி நிறுவனங்களில் சட்ட துறையில் முதுகலை பட்டம் (LLB)பெற்றிருக்க வேண்டும். 


பட்டய கணக்கர் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


விண்ணப்பதாரர்கள் 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். LLB படித்திருப்பவர்கள் 50% மதிப்பெண் 
பெற்றிருக்க வேண்டும்.


பட்டய கணக்கர் தேர்ச்சி பெற்றவர்கள்  taxation and law graduates கீழ் பயிற்சி (article
ship) பெற்றவர்களாக இருந்தால் நல்லது.


Information and Communication Technology  படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். 


வயது வரம்பு:


இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


பணி காலம்:


இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்கள் ஓராண்டு கால ஒப்பந்தம் அடிப்படையில் பணிக்கு அமர்ந்த்தப்படுவர். பணி திறன் அடிப்படையில் பணி காலம் நீட்டிக்கப்படும்.


இதற்கு தேர்வு செய்யப்படுபவர்கள் வருமான வரி ஆணையர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அலுவலகத்தில் பணியமர்த்தப்படுவர். ஆராய்ச்சி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஊதிய விவரம்:


இதற்கு மாத ஊதியமாக ரூ.40,000 வழங்கப்படும். 


தேர்வு செய்யப்படும் முறை:


இதற்கு பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பின்னர், நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். 


விண்ணப்பிப்பது எப்படி?


https://tnincometax.gov.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும்.


அதோடு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் சமர்பிக்க வேண்டும். இ-மெயில் மூலமாகவும் அனுப்ப வேண்டும்.


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி


The Deputy Commissioner of Income-tax (Hqrs)(Admn),
Room No. 110, 1st Floor, O/o Pr. Chief Commissioner of Income-tax, TN&P
No. 121, M.G. Road, Nungambakkam,
Chennai – 600034 


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி - chennai.dcit.hq.admin@incometax.gov.in w


மின்னஞ்சல் தலைப்பில் “APPLICATION FOR YP” என்று குறிப்பிட வேண்டும். 


இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு தொடர்பாக கூடுதல் விவரங்களை அறிய https://www.tnincometax.gov.in/upload/important_news/important_news-4757232747607.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி -11-09-2023 மாலை 6 மணி வரை 


******


தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஆணையர் அலுவலகத்தில் காலிய உள்ள பணியிடத்திற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணியிட விவரம்


e-District Manager 


கல்வித் தகுதி:



  • இதற்கு விண்ணப்பிக்க இளங்கலை பொறியியல், பி.டெக்., (கம்யூட்டர் சயின்ஸ், தொழில்நுட்ப அறிவியல்) உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

  • எம்.பி.ஏ. எம்.எஸ்.சி. கம்யூட்டர் சயின்ஸ், எம்.எஸ்.சி. ஐ.டி, சாஃப்வேர் பொறியியல் ஆகிய படிப்புகளில் பட்டம் பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

  • SSLC/ HSC/ UG/ PG என்ற முறையில் படித்திருக்க வேண்டும். 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 

  • இதற்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.’


வயது வரம்பு விவரம்:


இதற்கு விண்ணப்பிக்க 21 வயது நிரம்பியர்களாகவும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.


பணியிட விவரம்



  • நாமக்கல்

  • நாகப்பட்டினம்

  • பெரம்பலூர்

  • திருச்சிராப்பள்ளி

  • திருப்பூர்

  • வேலூர்

  • விழுப்புரம்

  • காஞ்சிபுரம்


தேர்வு செய்யப்படும் முறை:


இதற்கு கம்யூட்டர் தேர்வு நடத்தப்படும். 90 நிமிடங்கள் நடைபெறும் தகுதித் தேர்வில் 100 MCQ கேள்விகள் கேட்கப்படும். நெகட்டிவ் மார்க் முறை பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பாடத்திட்டம் 


ஆங்கிலம். கம்யூட்டர், C, C++., JAVA, நெட்வோர்க்கிங், இண்டர்நெட் டெக்னாலஜிஸ், ஹார்ட்வேர், டேட்டாபேஸ் மேனேஜ்மெண்ட் சிஸ்டம்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.


இந்தத் தகுதித் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.


தேர்வு கட்டணம்


இதற்கு விண்ணப்பிக்க கட்டணமாக ரூ.250 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.


தேர்வு நடைபெறும் நாள் - 24.09.2023


விண்ணப்பிப்பது எப்படி?


https://tnega.tn.gov.in/ - என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். 


விண்ணப்பிக்க கடைசி தேதி - 11.09.2023 -  6 மணி வரை


விண்ணப்பிக்க https://tnega-edm.onlineregistrationform.org/TEG/ - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


https://tnega-edm.onlineregistrationform.org/TEG/instructions2.jsp  - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.