தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு உணவு ஊட்டசத்து இயல் (Nutrition & Dietetics ) உடல் எடை சீரமைப்பு ( Slimming &Weight loss Courses) போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

Continues below advertisement

தாட்கோ எனப்படும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளது.

என்னென்ன பயிற்சிகள்?

இதன்படி, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு உணவு ஊட்டசத்து இயல் (Nutrition & Dietetics) உடல் எடை சீரமைப்பு ( Slimming & Weight loss Courses) போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது என தாட்கோ மேலாண்மை இயக்குநர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக தற்போது தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு. இளைஞர்களுக்கு உணவு ஊட்டசத்து இயல் (Nutrition & Dietetics ) உடல் எடை சீரமைப்பு (Slimming & Weight loss Courses) வழங்கப்பட உள்ளது.

என்னென்ன நிபந்தனைகள்?

இப்பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராகவும், பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராகவும். வயது வரம்பு 18 முதல் 35 வயதிற்குள்ளும், மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

இப்பயிற்சிக்கான கால அளவு 50 நாட்கள். மேலும் ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பயிற்சி நடைபெற உள்ளது. தகுதிபெறும் நபர்கள், பயிற்சி நடைபெறும் மாவட்டத்தில் தங்கி படிப்பதாற்கான செலவினத் தொகை தாட்கோவால் ஏற்கப்படும்.

ஆரம்பத்தில் ரூ.20,000 வரை ஊதியம்

இப்பயிற்சியில் தேர்ச்சி பெறும் தகுதியான நபர்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக வேலை வாய்ப்பும் அந்நிறுவனத்தின் மூலமாக ஆரம்ப கால மாத ஊதியமாக சுமார் ரூ.15,000/- முதல் ரூ.20,000/- வரையும் வருவாய் ஈட்டும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.

இப்பயிற்சியில் சேர தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்’’ என தாட்கோ மேலாண்மை இயக்குநர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.