மேலும் அறிய
சிவகங்கை: பிரதமர் தேசிய தொழிற்பழகுநர் முகாம் – ஜூன் 10 அன்று தொழிற்பழகுநர் பயிற்சி மேளா !
தொழிற்பழகுநர் பயிற்சி மேளாவில் புதிய நிறுவனங்கள் கலந்து கொண்டு Apprentice Portal-லில் பதிவு செய்த பின் பயிற்சியாளர்களை தேர்வு செய்யலாம்.

சேர்க்கை முகாம்
Source : whatsapp
சிவகங்கை மாவட்டம் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமானது (Prime Minister National Apprentice Mela – 2026), காரைக்குடிஅரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வருகின்ற 10.06.2026 அன்று நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தகவல்.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை
இந்திய அரசு , திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவு அமைச்சகம் மற்றும் இயக்குநரகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, சென்னை இணைந்து நடத்தும் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் – 2026, வருகின்ற 10.06.2026 அன்று (புதன் கிழமை), காலை 10:00 மணி முதல் மாலை 05.00 மணி வரை காரைக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது. மேலும், இந்த தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமில் மாநில அரசு நிறுவனங்கள், மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் நிறுவனங்கள் நேரடியாக ஒரே இடத்தில் தொழிற்பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை நடத்தவுள்ளனர்.
தேர்வான பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்
இந்த தொழிற்பழகுநர் பயிற்சி மேளாவில் புதிய நிறுவனங்கள் கலந்து கொண்டு Apprentice Portal-லில் பதிவு செய்த பின் பயிற்சியாளர்களை தேர்வு செய்யலாம். இந்த மேளாவில் Apprenticeship பயிற்சிக்கு ITI ல் NCVT , SCVT பயிற்சி பெற்று தேர்வான பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், விபரங்களுக்கு 04575-290625, 9342192184, 9894211427, 9442880179 எள்ற அலைபேசி எண்கள் அல்லது உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், வேலைவாய்ப்பு அலுவலக வளாகம் (முதல் தளம்) , சிவகங்கை அவர்களை தொடர்பு கொண்டு விவரங்கள் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்துள்ளார்.
Advertisement
தலைப்பு செய்திகள்
வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















