தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் (SPORTS DEVELOPMENT AUTHORITY OF TAMIL NADU) பயிற்றுனர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தமிழ்நாடு அரசு வெளியிட்டது.  இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இதற்கு நாளைக்குள் (30.12.2022) விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பணிக்கான தகுதிகளை கீழே காண்போம்.


பணி விவரம்:


பணி: பயிற்றுனர் 


மொத்த காலியிடங்கள்: 97 


விளையாட்டு பிரிவுகள்:


வில்வித்தை (Archery), தடகளப் பிரிவில்  ஸ்பிண்ட்ஸ்(, தாண்டுதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட Athletics (sprints, Jumps,Throws), பாரா தடகளம்( Para Athletics), குத்துச்சண்டை( Boxing), கூடைப்பந்து ( Basketball), Fencing, கால்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ்(Gymnastics), கைப்பந்து (Handball), ஹாக்கி, ஜூடோ, கபடி, கோ-கோ, நீச்சல், டென்னிஸ், வாலிபால், பளு தூக்குதல் மற்றும் மல்யுத்தம் ஆகிய பிரிவுகளில் காலியாக உள்ள பயிற்றுனர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 


ஊதிய விவரம்:


பயிற்றுனர் பணிக்கு மாதம் ரூ.35,600 முதல் ரூ. 1,12,800  வரை ஊதியம் வழங்கப்படும். 


கல்வித் தகுதி:


இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட துறையில் பயிற்சியாளர் பணிக்கு நிகரான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


எப்படி விண்ணப்பிப்பது?


இதற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைதளமான www.sdat.tn.gov.in - என்ற முகவரியின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களும் இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.  பணியிடங்களுக்கு நேரடி நியமன தேர்வு நடைபெறுகிறது. 


விண்ணப்பிக்கும் முறை:


 www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சுய விவரங்களை பூர்த்தி செய்து, அதோடு தேவையான கல்வி உள்ளிட்ட ஆவணங்களை அப்லோடு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.12.2022


வயது வரம்பு, இடஒதுக்கீடு, பணி அனுபவம் உள்ளிட்ட விவரங்கள் பற்றி அறிந்து கொள்ள https://www.sdat.tn.gov.in/pdf/12.12.2022_cr_Tamil.pdf' -என்ற லிங்கை கிளிக் செய்து அறிவிப்பின் விவரத்தை தெரிந்து கொள்ளலாம். 




மேலும் வாசிக்க.


https://tamil.abplive.com/education/tn-trb-annual-planner-2023-teachers-recruitment-board-exam-dates-college-lecturers-school-teachers-vacancies-posts-93341/amp


CUET PG 2023 Exam: மத்திய பல்கலை. முதுகலை படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு எப்போது..? அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு..!