SBI PO Recruitment 2023: விண்ணப்பித்துவிட்டீர்களா? 2,000 பணியிடங்கள்; எஸ்.பி.ஐ.வங்கியில் வேலை - இன்றே கடைசி!
ஜான்சி ராணி | 03 Oct 2023 09:58 AM (IST)
SBI PO Recruitment 2023: எஸ்.பி.ஐ. அறிவித்துள்ள வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..
பாரத ஸ்டேட் வங்கி
பாரத ஸ்டேட் வங்கியின் ப்ரொபேஷனரி அதிகாரிகளுக்கான (Probationary Officers) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எஸ். பி.ஐ.-ன் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, 2,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடந்த மாதம் 30-ம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், கால அவகாசம் அக்டோபர் 3,தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த வேலைவாய்ப்பிற்கு இன்று மாலை வரை விண்ணப்பிக்கலாம்.
பணி விவரம்:
ப்ரோபேஷனரி அதிகாரிகள் (Probationary Officers)
மொத்தப் பணியிடங்கள்- 2000
கல்வித் தகுதி:
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் / கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 31.12.2023 -ன் அடிப்படையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 21 வயதிற்கு குறைவாகவோ, 30 வயதுக்கு மேற்பட்டவர்களாகவோ இருத்தல் கூடாது.
எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்:
இந்தப் பணிக்கு மூன்று நிலைகளில் தேர்வு நடத்தப்பட்டு அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். கணினி வழியில் தேர்வு நடைபெறும்.
கவனிக்க :
ஆன்லைன் பதிவு செய்தல்: 07.09.2023 முதல் 27.09.2023 வரை; அன்றிரவே விண்ணப்பிக் கட்டணம் செலுத்தியிருக்க வேண்டும்;
தேர்வுக்கான பயிற்சி : நவம்பர் 2023
முதல்நிலை எழுத்துத் தேர்வு: நவம்பர் /டிசம்பர், 2023
முதன்மை எழுத்துத் தேர்வு : 2023 / நவம்பர்
திறனறிவுத் தேர்வு: 2023 பிப்ரவரி/ ஜனவரி
திறனறிவுத் தேர்வு: 2023 பிப்ரவரி/ ஜனவரி
தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் - பிப்ரவரி / மார்ச், 2023
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பக் கட்டணம் ரூ.750ஆகும். பட்டியலின/ பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் மூலம் மட்டுமே விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
ஊதிய விவரம்:
ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ. 41,960 வழங்கப்பட உள்ளது.
முதல் நிலை தேர்வு:
முதன்மை தேர்வு:
இறுதித் தேர்வு:
எழுத்து தேர்வில் மைனஸ் மார்க் இருக்கிறதா:
எழுத்துத் தேர்வில் தவறான பதில்களுக்கு 1/4 மார்க் மைனஸ் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கரை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஓட்டுநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி விவரம்:
ஈப்பு ஓட்டுநர்
கல்வித் தகுதி:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
வயது வரம்பு:
இந்தப் பணியிடங்களுக்கு பொதுப்பிரிவு பிரிவினருக்கு 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பட்டிலின பிரிவினர் /பழங்குடியின பிரிவினர், ஆதரவற்ற விதவை உள்ளிட்டோருக்கு அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள்:
1. விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
2. இனசுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
3. ஒவ்வொரு பணியிடத்திற்கும் தகுதியின் அடிப்படையில் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.
4. விண்ணப்பதாரர் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட மாவட்டத்திற்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.
5. அரசு விதிகளின்படி இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.
6. சுய முகவரியுடன் கூடிய ரூ.25/- அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட அஞ்சல் உறை -1 (10*4 Inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
அஞ்சல் அனுப்பப்பட வேண்டிய முகவரி:
ஆணையாளர்,ஊராட்சி ஒன்றியம்,மதுக்கரை
எப்படி விண்ணப்பிப்பது?
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி நேர்காணல் கடிதம் (Call Letter) பின்னர் அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.