பாரத ஸ்டேட் வங்கியின் ப்ரொபேஷனரி அதிகாரி (Probationary Officers) வேலைவாய்ப்பிற்கான முதல்நிலை தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 


எஸ்.பி.ஐ. புரோபேசனரி அதிகாரிகள் 2,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த நவம்பர் மாதம் 1-ம் தேதி முதல்நிலை தேர்வு நடைபெற்றது. முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 



எப்படி காண்பது?


https://sbi.co.in/web/careers/crpd/po-pre-2023 - என்ற இணைப்பை க்ளிக் செய்து தேவையான தகவல்களை பூர்த்தி செய்து தேர்வு முடிவுகளை காணலாம்.


பதிவு எண் (Registration Number/ Roll Number')  பிறந்த தேதி (Date of Birth) உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்து தேர்வு முடிவுகளை தரவிறக்கம் செய்யலாம்.


எழுத்து தேர்வில் மைனஸ் மார்க் இருக்கிறதா?


எழுத்துத் தேர்வில் தவறான பதில்களுக்கு 1/4 மார்க் மைனஸ் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தேர்வுக்கான பயிற்சி: 


நவம்பர்/டிசம்பர் 2022


டிசம்பர் முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் இருந்து ஆன்லைன் தேர்வுக்கான ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்


முதன்மை எழுத்துத் தேர்வு:


2023 ஜனவரி/பிப்ரவரி


திறனறிவுத் தேர்வு: 


2023 பிப்ரவரி/மார்ச் - நேர்முகத் தேர்வு


2023 பிப்ரவரி/மார்ச் -இறுதி பட்டியல்  


முதன்மை தேர்வு:


 




 



இறுதித் தேர்வு:




 


அதிகாரப்பூர்வ வலைதள முகவரி- https://bank.sbi/careers  / https://www.sbi.co.in/careers


முக்கிய தேதிகள்


 




 விவரம் அறிய https://sbi.co.in/documents/77530/36548767/060923-1_detailed+Advt.+English+PO+23-24_07.09.2023.pdf/9c9b6e4b-9fdd-df11-3194-d40cdb336aac?t=1694002437061 -லிங்கை கிளிக் செய்யவும். 


BHEL Recruitment 2023 :


பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (பி.ஹெச்.இ.எல்.) நிறுவனத்தில் ' முதன்மை ஆலோசகர்'  பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


பணி விவரங்கள்:


 வந்தே பாரத் திட்டத்தின் கீழ் பணிபுரிய முதன்மை ஆலோசகர் பணிக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 
பணி இடம்:


இந்த வேலைவாய்ப்புக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் டெல்லி மற்றும் பல்வேறு மாநிலங்களில் உள்ள அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவர்.


ஊதிய விவரம்:


இதற்கு தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு ரூ. 1,25,000 மாத ஊதியம் வழங்கப்படும்.


தேர்வு செய்யப்படும் முறை:


ஆன்லைன் நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.


கல்வித் தகுதி:


AMIE, பொறியியல், பி.டெக்., எலக்ட்ரிக்கல் இஞ்சினியரிங் உள்ளிட்ட பொறியியல்  படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


இரண்டு ஆண்டுகால பணி அனுபவம் இருக்க வேண்டும்.


ரயில்வே துறையில் பணி செய்து ஓய்வு பெற்றவர்கள், மெட்ரோ பணியில் வேலை பார்த்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.


வயது வரம்பு:


இதற்கு விண்ணப்பிக்க 63 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


பணி காலம்:


இது ஓராண்டுகால ஒப்பந்தம் அடிப்படையிலான பணி. பணிதிறன் அடிப்படயில் பணிகாலம் நீட்டிக்கப்படும்.


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 15.11.2023


அதிகாரப்பூர்வ இணையதள முகவரி- https://drive.google.com/file/d/1yqycf84GTYoSioqqJ_Xa1vUDsN4EdeYW/view - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.