பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள ஜூனியர் அசோசியேட்- Junior Associate (Customer Support & Sales) அதிகாரிகளுக்காக நடத்தப்பட்ட முதன்மைத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளன.
நாடு முழுவதும் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் க்ளரிக்கல் கிரேடு நிலையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு, முதல்நிலைத் தேர்வு ஜனவரி மாதம் நடைபெற்றது. முதன்மைத் தேர்வுகள் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 25 மற்றும் மார்ச் 4ஆம் தேதிகளில் நடைபெற்றன.
தெரிவு செய்யும் முறை
இதற்கு முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மொத்த பணியிடங்கள் - 8,773
குஜராத், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, லடாக், தமிழ்நாடு,புதுச்சேரி, தெலங்கானா, மேற்கு வங்காளம், சிக்கிம், அசாம், மிசோரம், திரிபுரா,பீகார், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள வங்கிக் கிளைகளில் இந்த வேலைவாய்ப்பின் மூலம் தகுதியான நபர் தேர்வு செய்யப்பட உள்ளனர். உள்ளூர் மொழிகளில் பேசும் திறன் கொண்டவர்கள் மட்டுமே அந்தந்த பிராந்தியங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
முதன்மைத் தேர்வு முடிவுகளில் தேர்ச்சி பெற்றோர் நேர்காணலில் கலந்துகொண்ட பிறகு, தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்வது எப்படி?
* தேர்வர்கள் sbi.co.in என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
* அதில் Current Openings என்ற பிரிவை க்ளிக் செய்ய வேண்டும்.
* அந்த பக்கத்தில் தோன்றும் "Recruitment Of Junior Associates (Customer Support & Sales)"என்ற லிங்க்கை க்ளிக் செய்ய வேண்டியது அவசியம்.
* அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளித்து, உள்ளே செல்லவும்.
* திரையில் தோன்றும் முடிவுகளை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
தொடர்புக்கு - 022-22820427 ( 11:00 AM and 05:00 PM வங்கி வேலைநாட்களில்)
மின்னஞ்சல் முகவரி - http://cgrs.ibps.in