ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் 560 பாராமெடிக்கல் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டு, அதற்கான விண்ணப்பப் பதிவை இன்று தொடங்கியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வருகிற அக்டோபர் 14ஆம் தேதி வரை RRB-ன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

Continues below advertisement

வயது வரம்பு


விண்ணப்பதாரர்கள் ஜனவரி 1, 2027 அன்று குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சம் 40 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, இடஒதுக்கீடு பெறும் பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் உரிய தளர்வுகள் வழங்கப்படும்.

Continues below advertisement

தேர்வு முறை மற்றும் சம்பளம்

கணினி அடிப்படையிலான தேர்வு, அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை ஆகிய மூன்று நிலைகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 7-வது மத்திய ஊதியக் குழுவின் கீழ் பே லெவல் 3 முதல் பே லெவல் 7 வரையிலான ஊதிய விகிதத்தில் சம்பளம் வழங்கப்படும். இந்த அடிப்படை ஊதியத்துடன், விதிகளுக்கு உட்பட்ட பிற சலுகைகள் மற்றும் படிகளும் கிடைக்கும்.

விண்ணப்பக் கட்டணம்

பொதுப் பிரிவினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் (EWS) ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பட்டியல் சமூகத்தினர், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், திருநங்கைகள், சிறுபான்மையினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 250 ஆகும்.

தகுதிகள், தேர்வு முறை மற்றும் பிற விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் முழுமையாக வாசித்துத் தெரிந்துகொள்ளுமாறு விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், இந்த வேலைவாய்ப்பு தொடர்பான தொடர் அறிவிப்புகள் மற்றும் புதிய தகவல்களுக்கு RRB அதிகாரப்பூர்வ இணையதளத்தை அடிக்கடி சரிபார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு: https://www.rrbapply.gov.in/assets/forms/CEN_05_2026_PM.pdf