தேனி மாவாட்ட சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டும் வரும் அலுவலகத்தில் சமூக பணியாளர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்


சமூகப் பணியாளர் (Social Worker)


கல்வி மற்றும் பிற தகுதிகள்


இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சமூகவியல், சமூகப்பணி இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 


குழந்தைகள் நலன் / சமூக நலன் சார்புடைய பணிகளில் பணிபுரிந்த அனுபவம் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 


கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். 


வயது வரம்பு விவரம்


இதற்கு விண்ணப்பிக்க 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


ஊதிய விவரம்:


இதற்கு மாத ஊதியமான ரூ.18,536/- வழங்கப்படுகிறது.  


பணிகாலம்


இது ஓராண்டு கால ஒப்பந்த அடிப்படையிலான வேலைவாய்ப்பு ஆகும். 


தெரிவு செய்யப்படும் முறை


இதற்கு தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளது. 


விண்ணப்பிப்பது எப்படி?


இதற்கு தகுதியுள்ளவர்கள்  https://theni.nic.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அஞ்சலில் அனுப்ப வேண்டும்.


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி


மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
ஒருங்கிணைந்த அரசு பல்துறை வளாகம் - II
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்.
தேனி - 625531


விண்ணப்பிக்க கடைசி தேதி - 15.11.2023


வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களை காண  https://cdn.s3waas.gov.in/s39a96876e2f8f3dc4f3cf45f02c61c0c1/uploads/2023/10/2023103155.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.


பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்


BHEL Recruitment 2023 : பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (பிஹெச்இஎல்) நிறுவனத்தில் ' Supervisor Trainee'  பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


பணி விவரங்கள்:


 Supervisor Trainee (Mechanical)


 Supervisor Trainee (Civil) 


 Supervisor Trainee (HR) 


பணி இடம்:


இந்த வேலைவாய்ப்பிற்கு தேர்வு செய்யப்படுபவர்கள் திருச்சி, போபால், ஐதராபாத், ஹரித்வார், ஜான்சி, கார்ப்ரேட் ஆபிஸ், பவர் செக்டார் உள்ள அலுவலகத்தில் பணியமர்த்தப்படுவர். 


ஊதிய விவரம்:


இதற்கு தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு ரூ.32,000 - 1,00,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.


தேர்வு செய்யப்படும் முறை:


ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.


கல்வித் தகுதி:


விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து எலக்ட்ரிக்கல் /  எலக்ட்ரானிக்ஸ் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


65% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 


வயது வரம்பு:


இதற்கு விண்ணப்பிக்க 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


பணி காலம்:


இது இரண்டு ஆண்டுகால ஒப்பந்தம் அடிப்படையிலான பணி. 


விண்ணப்ப கட்டணம்


இதற்கு விண்ணப்பிக்க ஜி.எஸ்.டி.-யுடன் சேர்த்து ரூ.795 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். 


பட்டியலின/ பழங்குடியின பிரிவினர் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கபட்டுள்ளது. ஆனால், ப்ராசசிங் கட்டணம் செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 25.11.2023


உத்தேசிக்கப்பட்ட ஆன்லைன் எழுத்துத் தேர்வு தேதி - டிசம்பர்,2023


அதிகாரப்பூர்வ இணையத முகவரி-https://www.apprenticeshipindia.gov.in/  - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.