புதுச்சேரி, காரைக்கால், மாகி பிராந்தியங்களில் உள்ள அரசு ஆரம்ப பள்ளிகளில் காலியாக உள்ள பி.எஸ்.டி., ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
அரசு ஆரம்ப பள்ளிகளில் 190 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பு அறிவிப்பு
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்.,
புதுச்சேரி, காரைக்கால் மற்றும் மாகி ஆகிய மூன்று பிராந்தியங்களிலும் உள்ள அரசு ஆரம்ப பள்ளிகளில் காலியாக உள்ள மொத்தம் 190 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்கள் பி.எஸ்.டி. (Primary School Teacher) பதவிக்காக நிரப்பப்பட உள்ளன.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் 2025ம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி காலை 10 மணி முதல் ஆன்லைன் மூலம் பெறப்பட உள்ளன. விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 14 ஆகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து, அக்டோபர் 27 மாலை 5:00 மணிக்குள், பள்ளிக் கல்வித் துறை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் https://recruitment.py.gov.in] (https://recruitment.py.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் மட்டும் 181 பணியிடங்கள் உள்ளன. இதில், பொதுப் பிரிவுக்கு 72 இடங்கள், எம்.பி.சி.க்கு 32, எஸ்.சி.க்கு 28, ஓ.பி.சி.க்கு 20, இடபுள்யூ.எஸ்.க்கு 3, முஸ்லீம் பிரிவுக்கு 4, பி.டி.க்கு 2 மற்றும் எஸ்.டி.க்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்காக உள் ஒதுக்கீடாக 9 இடங்கள் பதிலளிக்கப்பட்டுள்ளன. மாகி பிராந்தியத்தில் 9 பணியிடங்கள் உள்ளன. இதில் பொதுப் பிரிவு – 3, எஸ்.சி. – 2 மற்றும் எஸ்.டி. – 4 இடங்கள் உள்ளன. இங்கு மாற்றுத் திறனாளிகளுக்காக ஒரு உள் ஒதுக்கீடு இடமும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் பிளஸ் 2 தேர்வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அதோடு, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு ஆண்டு டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி பாடமாக தமிழ் அல்லது மலையாளம் இருந்திருக்க வேண்டும். இல்லையெனில் அந்தந்த பிராந்திய மொழிகளில் அடிப்படை ஆசிரியர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும், ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) பெற்றுள்ள மதிப்பெண்களும் இந்த வேலைக்கு தகுதி அளிக்க பயன்படுத்தப்படும். பொதுப் பிரிவு மற்றும் இடபுள்யூ.எஸ். பிரிவினர் 60% (90 மதிப்பெண்) , ஓ.பி.சி., எம்.பி.சி., மீனவர் மற்றும் முஸ்லீம் பிரிவினர் 55% (82 மதிப்பெண்) , எஸ்.சி., எஸ்.டி., பி.டி., மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் 50% (75 மதிப்பெண்) எடுத்திருந்தால் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பும்
இந்த பணியிடங்களுக்கு பொதுவாக 18 முதல் 32 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர். ஆனால் சில பிரிவினருக்கு வயது தளர்வு வழங்கப்பட்டுள்ளது. எம்.பி.சி., ஓ.பி.சி., மீனவர், முஸ்லீம், பி.டி. பிரிவினர் – 3 ஆண்டுகள், எஸ்.சி., எஸ்.டி. – 5 ஆண்டுகள், மாற்றுத் திறனாளிகள் – பொதுப் பிரிவுக்கு 10 ஆண்டுகள், ஓ.பி.சி. மற்றும் மத்தியசார்ந்த பிரிவினருக்கு 13 ஆண்டுகள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 15 ஆண்டுகள் வரை தளர்வு உண்டு.
இப்பணியிடங்களை எதிர்நோக்கும் பட்டதாரிகளுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். அரசு பள்ளிகளில் பணியாற்றும் வாய்ப்பு மற்றும் நிரந்தர வேலைக்கான நம்பிக்கை இவர்களுக்கு கல்வி துறையில் ஒரு புதிய முன்னேற்ற வாய்ப்பை உருவாக்கும்.