மேலும் அறிய

வாக்குறுதி 5.5 லட்சம்: கொடுத்ததோ வெறும் 94,191 அரசு வேலை- இளைஞர்கள் சாபம் திமுகவை சும்மா விடாது- அன்புமணி!

திமுக தேர்தல் வாக்குறுதி மீறல்: 5.5 லட்சம் அரசு வேலைகள் எங்கே? இளைஞர்களின் சாபம் திமுகவை வீழ்த்தும்- அன்புமணி.

திமுக தேர்தல் வாக்குறுதியில் 5.5 லட்சம் அரசு வேலை சொன்னதாகவும் கொடுத்ததோ 94,191 வேலை மட்டுமே எனவும் இளைஞர்கள் சாபம் திமுகவை சும்மா விடாது என்றும் பாமக தலைவர் அன்புமணி சாடி உள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, ’’திமுக அதன் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தவாறு ஐந்தரை லட்சம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்படவில்லை என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புக்கொண்டுள்ளார். தேனாறும், பாலாறும் ஓடும் என்று பொய்யான வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, அதை நிறைவேற்றத் தவறியதும், வெட்கமே இல்லாமல் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு செய்த துரோகத்தை ஒப்புக்கொள்வதும் கண்டிக்கத்தக்கவை.

வெறும் 17% மட்டுமே

அரசுப் பணிகளுக்கு போட்டித் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குவதற்காக சென்னையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,‘‘திமுக ஆட்சியில் இதுவரை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வாயிலாக 45,126 பேர், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக 24,927 பேர், ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக 12,894 பேர், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக 11,244 பேர், என மொத்தம் 94,191 பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்பட்டுள்ளன’’ என்று தெரிவித்திருக்கிறார். இது திமுக உறுதியளித்த வேலைவாய்ப்புகளில் வேலைவாய்ப்புகளில் 17% மட்டுமே.

2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், ‘‘திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு அலுவலகங்களில் காலியாக இருக்கும் 3.50 லட்சம் பணியிடங்களில்  தமிழ்நாட்டு இளைஞர்கள் நியமிக்கப்படுவார்கள் (வாக்குறுதி எண்:187), 4 வகையான பணிகளை மேற்கொள்ள 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு அதில் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவர் (வாக்குறுதி எண்:188,189, 190,191)’’ என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.

ஆனால், ஐந்தாண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், வெறும் 94,191 பேருக்கு மட்டுமே அரசு வேலைகள் வழங்கப்பட்டிருப்பது திமுக அரசின் தோல்வி மட்டுமல்ல... தமிழக இளைஞர்களுக்கு திட்டமிட்டு செய்யப்பட்ட நம்பிக்கை துரோகமும் ஆகும்.

காலி இடங்களையாவது நிரப்பியிருக்க வேண்டுமா?


திமுக அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதையும் தாண்டி, இயல்பாகச் செய்ய வேண்டிய கடமைகளைக் கூட செய்யவில்லை என்பது தான் பெரும் துரோகம். திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த காலியிடங்கள் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாத நிலவரப்படியானவையாகும். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஐந்தாண்டுகளில் 1.50 லட்சம் முதல் 2 லட்சம் வரையிலான அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றிருக்கக் கூடும். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றாலும், புதிதாக ஓய்வு பெற்றவர்களால் ஏற்பட்ட காலியிடங்களையாவது திமுக அரசு நிரப்பியிருக்க வேண்டும்.

ஆனால், புதிதாக ஏற்பட்ட காலியிடங்களில் பாதி கூட நிரப்பப்படவில்லை என்பதிலிருந்தே திமுகவின் சொல்லுக்கும், செயலுக்கும் இடையிலான வித்தியாசம் ஆர்க்டிக் துருவத்திற்கும், அண்டார்டிகா துருவத்திற்கும் இடையிலான தொலைவை விட அதிகம் என்பதை அறிந்து கொள்ள முடியும். அரசு வேலையை எதிர்பார்த்துக் காத்திருந்த இளைஞர்களுக்கு ஐந்தாண்டுகளில் திமுக செய்தது துரோகம், துரோகம், துரோகம் மட்டுமே.

சட்டம் இயற்றாதது ஏன்?

அதேபோல், தனியார் நிறுவனங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 50 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப் படும் என்று வாக்குறுதி அளித்த திமுக, இதுவரை 5 லட்சம் வேலைவாய்ப்புகளைக்கூட வழங்கவில்லை. வழங்கப்பட்ட மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகள் கூட தமிழக இளைஞர்களுக்கு கிடைக்கவில்லை; மாறாக அவை பிற மாநில இளைஞர்களுக்குத் தான் தாரைவார்க்கப்பட்டன. இதற்கு வசதியாகவே, தமிழக தனியார் நிறுவனங்களில் 75% வேலைவாய்ப்புகளை தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே  வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்படும் என்ற இன்னொரு வாக்குறுதியையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை.

தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் ஒரு கோடியே 30 லட்சத்திற்கும் கூடுதலான படித்த இளைஞர்கள் அவர்களின் தகுதிக்கேற்ற வேலை கிடைக்காமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு கண்ணியமான வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்ற கவலையோ, அக்கறையோ திமுக அரசுக்கு இல்லை. கடந்த ஐந்தாண்டுகளில் திமுக அரசு அக்கறை காட்டியதெல்லாம் கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் ஆகியவற்றில் மட்டும்தான். திமுகவின் இந்த ஊழல் பசியாலும், துரோகத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் இளைஞர்கள்தான்.

நிறைவேற்றாத வாக்குறுதிகள்


அரசு வேலைகளை எதிர்பார்த்துக் காத்திருந்த இளைஞர்களுக்கு மட்டுமல்ல... அரசுத்துறை பணிகளில்  ஏற்கனவே சேர்ந்து விட்டவர்களுக்கும் திமுக அரசு பரிசளித்தது துரோகத்தை மட்டும் தான். இடைநிலை ஆசிரியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம், பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு பணி நிலைப்பு, பகுதி நேர பணியாளர்களுக்கு பணி நிலைப்பு, ஊராட்சி செயலாளர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம், சத்துணவு & அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதிய உயர்வு, கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு என அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட இதுவரை திமுக நிறைவேற்றவில்லை.

தமிழ்நாட்டை இதுவரை ஆட்சி செய்த அரசுகளிலேயே மனசாட்சியும், மனிதநேயமும் இல்லாத ஆட்சி என்றால் அது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தான். மாணவர்கள், படித்த இளைஞர்கள், அரசு ஊழியர்கள் என அனைத்துத் தரப்பினரும் திமுக ஆட்சியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  தங்களை ஏமாற்றிய, துரோகம் செய்த திமுக அரசுக்கு எதிரான அவர்களின் சாபம் இந்த ஆட்சியை வீழ்த்தும்’’ என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சென்னையில் இலவச ஸ்கூபா டைவிங் பயிற்சி! கடல்சார் வேலைவாய்ப்பு கனவா? உடனே விண்ணப்பிக்கவும்
சென்னையில் இலவச ஸ்கூபா டைவிங் பயிற்சி! கடல்சார் வேலைவாய்ப்பு கனவா? உடனே விண்ணப்பிக்கவும்
விமானப் பணி கனவா? தாட்கோ வழங்கும் இலவச பயிற்சி! 3 மாதத்தில் வேலை உறுதி, உடனே விண்ணப்பியுங்கள்!
விமானப் பணி கனவா? தாட்கோ வழங்கும் இலவச பயிற்சி! 3 மாதத்தில் வேலை உறுதி, உடனே விண்ணப்பியுங்கள்!
இன்ஜினியரிங் முடித்தவர்கள் கவனத்திற்கு... செம வேலை வாய்ப்பு உங்களுக்காக!!!
இன்ஜினியரிங் முடித்தவர்கள் கவனத்திற்கு... செம வேலை வாய்ப்பு உங்களுக்காக!!!
டிகிரி முதல் 5-ஆம் வகுப்பு வரை... மயிலாடுதுறை ஆட்சியர் அறிவித்துள்ள பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்!
டிகிரி முதல் 5-ஆம் வகுப்பு வரை... மயிலாடுதுறை ஆட்சியர் அறிவித்துள்ள பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா
ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BJP on TVK Vijay: கூட்டணிக்கு வரும் தவெக? ஓபிஎஸ் முடிவு சாபமா? குழாயடி சண்டை, கூட்டணி மாற்றம்: பாஜக பரபர!
BJP on TVK Vijay: கூட்டணிக்கு வரும் தவெக? ஓபிஎஸ் முடிவு சாபமா? குழாயடி சண்டை, கூட்டணி மாற்றம்: பாஜக பரபர!
MP-க்களான அன்புமணி, எல்.கே.சுதீஷ்; 6 பேர் போட்டியின்றி தேர்வு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
MP-க்களான அன்புமணி, எல்.கே.சுதீஷ்; 6 பேர் போட்டியின்றி தேர்வு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
BJP on TVK Vijay: விஜய்க்கு தங்கம் விலை தெரியுமா? டிவியை உடைத்தவர் இலவசங்கள் வாக்குறுதி தருவதேன்?- பொளந்த பாஜக!
BJP on TVK Vijay: விஜய்க்கு தங்கம் விலை தெரியுமா? டிவியை உடைத்தவர் இலவசங்கள் வாக்குறுதி தருவதேன்?- பொளந்த பாஜக!
’கொள்கை எதிரியுடன் கூட்டணியா?’ விஜய் எடுக்கப்போகும் முடிவு என்ன? –பரபரப்பில் தமிழக அரசியல்..!
’கொள்கை எதிரியுடன் கூட்டணியா?’ விஜய் முடிவு என்ன? –பரபரப்பில் தமிழக அரசியல்..!
’’எங்கும் கொலை, எப்போதும் கொலை; நீங்கள் ஆண்டதும், மக்கள் மாண்டதும் போதும்’’- திமுகவை வறுத்தெடுத்த ஈபிஎஸ்
’’எங்கும் கொலை, எப்போதும் கொலை; நீங்கள் ஆண்டதும், மக்கள் மாண்டதும் போதும்’’- திமுகவை வறுத்தெடுத்த ஈபிஎஸ்
TN Election Rewind: ஜெயலலிதாவையே தோற்கடித்த பர்கூர்.. அதிமுகவை அலறவிட்ட 1996 சட்டமன்ற தேர்தல்!
TN Election Rewind: ஜெயலலிதாவையே தோற்கடித்த பர்கூர்.. அதிமுகவை அலறவிட்ட 1996 சட்டமன்ற தேர்தல்!
2026 பொதுத் தேர்வு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு- கூடுதல் நேரம் வழங்கி உத்தரவு!
2026 பொதுத் தேர்வு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு- கூடுதல் நேரம் வழங்கி உத்தரவு!
மருதமலை கோவிலில் செல்போன் தடை… நாளை முதல் அமலுக்கு வரும் அதிரடி அறிவிப்பு
மருதமலை கோவிலில் செல்போன் தடை… நாளை முதல் அமலுக்கு வரும் அதிரடி அறிவிப்பு
Embed widget