பல்லாவரத்தில் 20,000 வேலைவாய்ப்புகள்! 21.02.2026-ல் மாபெரும் முகாம்: மிஸ் பண்ணிடாதீங்க!
"தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 21.02.2026 (சனிக்கிழமை) அன்று செயின்ட் தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி பல்லாவரத்தில் நடைபெற உள்ளது"

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 21.02.2026 (சனிக்கிழமை) அன்று செயின்ட் தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி பல்லாவரத்தில் நடைபெற உள்ளது.
20,000 காலி பணியிடங்கள்
இம்மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 150-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு சுமார் 20000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளார்கள்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வேலையளிப்பவர் மற்றும் வேலை நாடுநர்களுக்கு அனுமதி முற்றிலும் இலவசம். மேலும், வேலையளிப்பவர் மற்றும் வேலை நாடுநர்கள் தங்கள் விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வேலைவாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் பி.இ / ஐடிஐ / டிப்ளமோ / பாராமெடிக்கல் மற்றும் இதர கல்வித்தகுதிகள் கொண்ட வேலைநாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வேலைநாடுநர்களும் கலந்துகொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயன்பெறலாம்.
வயது வரம்பு என்ன ?
இப்பணிகளுக்கான வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய அனைத்து கல்வி சான்றிதழ் நகல்கள், சுய விவர குறிப்பு (பயோடேட்டா) மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் 21.02.2026 (சனிக்கிழமை) அன்று காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை செயின்ட் தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பல்லாவரத்தில் நடைபெறவிருக்கும் இம்மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்:
இம்மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு பதிவு அட்டை ரத்து செய்யப்பட மாட்டாது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும், இம்முகாம் தொடர்பான விவரங்களுக்கு 044-27426020 / 9499055895 / 9486870577 / 8122140214 மற்றும் 9715414895என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.























