அகில இந்திய வானொலியின் (All India Radio) சென்னை பிரிவில், மாநில செய்திப்பிரிவில் பகுதி நேர ஆசிரியர் ( casual News Editors ) வெப் எடிட்டர் (casual Web Editor) ஆகிய பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி விவரம்:
பகுதிநேர செய்தி ஆசிரியர் ( casual News Editors )
பகுதிநேர வெப் எடிட்டர் (casual Web Editor)
பணியிடம்:
சென்னை வானொலி நிலையம்- செய்திப்பிரிவு
தேவையான தகுதிகள்:
பகுதி நேர செய்தி ஆசிரியர் பணி:
சென்னை வானொலி நிலையத்தின் செய்திப்பிரிவில் பணியாற்ற பகுதி நேர செய்தி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இதழியலில் பட்டம் அல்லது பட்டப்படிப்பு பயின்றிருக்க வேண்டும். விண்ணப்பிப்போர் சென்னையில் வசிப்பவராக இருப்பது அவசியம். ஊடகத்துறையில் மூன்றாண்டுகால பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் இருந்து தமிழில் திறம்பட மொழிப்பெயர்ப்பு செய்யும் திறன் இருக்க வேண்டும். செய்திகளை உடனுக்குடன் பதிவிட தெரிந்திருக்க வேண்டும்.
பகுதி நேர வெப் எடிட்டர்:
பகுதி நேர வெப் எடிட்டர் பணிக்கு விண்ணப்பிக்க, இதழியலில் பட்டம் அல்லது பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். சென்னையில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும். செய்தி நிறுவனங்களில் சமூக வலைதள பக்கங்களை நிர்வகித்திருக்க வேண்டும். இரண்டு ஆண்டு கால பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆடியோ, வீடியோ எடிட்டிங் தெரிந்திருக்க வேண்டும். டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் செய்திகளை வடிவமைப்பதில் நல்ல திறன் கொண்டவர்களாக இருப்பது நல்லது.
கணினி பயன்பாடு குறித்து நன்கு தெரிந்திருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கில் மொழி அறிவு இருக்க வேண்டும். (எழுதுதல், பேசுதல் )
வயது வரம்பு:
பகுதிநேர செய்தி ஆசிரியர் பணிக்கு விண்ணபிக்க 55 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
பகுதிநேர வெப் எடிட்டர் பணிக்கு 35 விண்ணப்பிக்க விரும்புவோர் வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
தேர்வு:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பிக்க விரும்புவோர் ரூ.354/- தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டும். பட்டியலின/ பழங்குடியினர் ரூ.266/ தேர்வுக்கட்டணம் செலுத்தி வேண்டும்.
தேர்வுக் கட்டண ரசீதுடன், கல்வித் தகுதி, பிறந்த தேதி, ஆதார் எண் ஆகிய விவரங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட வேண்டும். சுய விவர குறிப்பு மற்றும் கல்வி சான்றிதழ், பணி அனுபவ சான்றிதழ் உள்ளிட்ட தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சென்னை வானொலி அலுவலகத்திற்கு அஞ்சல் அனுப்ப வேண்டும்.
முகவரி:
தலைவர்.
அகில இந்திய வானொலி,
எண்.4, காமராஜர் சாலை,
மயிலாப்பூர், சென்னை 600 004
விண்ணப்பங்கள் வரும் செப்டம்பர் 30, 2022 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.