தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மற்றும் உப கோயில்களில் உதவியாளர் மற்றும் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 296 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 08.01.2024க்குள் விண்ணப்பித்துக்கொள்ள அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.




காலியிடங்களின் விவரம்


இளநிலை உதவியாளர் – 7


சீட்டு விற்பனையாளர் – 13


சத்திரம் காப்பாளர் – 16


சுகாதார மேஸ்திரி – 4


பூஜை – 1


காவல் – 44


துப்புரவு பணியாளர் – 161


கால்நடை பராமரிப்பு – 2


உதவி யானை மாவுத்தர் – 1


சுகாதார ஆய்வாளர் – 1


உதவிப் பொறியாளர் (மின்னணுவியல்) – 1


உதவிப் பொறியாளர் (சிவில்) – 4


இளநிலை பொறியாளர் (மின்) – 1


இளநிலை பொறியாளர் (ஆட்டோ மொபைல்) – 1


இளநிலை பொறியாளர் (மெக்ட்ரானிக்ஸ் ரோபாட்டிக்ஸ்) 1


மேற்பார்வையாளர் (சிவில்) – 3


மேற்பார்வையாளர் (இயந்திரவியல்) – 3


தொழில்நுட்ப உதவியாளர் (மின்) – 2


தொழில்நுட்ப உதவியாளர் (DECE) – 1


தொழில்நுட்ப உதவியாளர் (இயந்திரவியல்) – 1


கணினி இயக்குபவர் – 3


ஆய்வக நுட்புனர் – 1


வின்ச் ஆப்ரேட்டர் – 1


மிசின் ஆப்ரேட்டர் – 1


மெசின் ஆப்ரேட்டர் – 1


ஹெல்பர் – 2


HT ஆப்ரேட்டர் – 1


ஓட்டுநர் – 2


ஆகம ஆசிரியர் – 1


அத்யானப்பட்டர் – 1


அர்ச்சகர் – 2


நாதஸ்வரம் – 2


தவில் – 2


தாளம் – 5


மாலைகட்டி – 1


கல்வித் தகுதி: தொழில்நுட்ப பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் இன்ஜினியரிங் அல்லது டிப்ளமோ அல்லது ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும். இளநிலை உதவியாளர், சீட்டு விற்பனையாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். ஆசிரியர் பணியிடங்களுக்கு அதற்குரிய தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். பிறப் பணியிடங்களுக்கு தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். முழுமையான விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பாருங்கள்.


வயதுத் தகுதி :  விண்ணப்பதாரர் 18 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


Job Fair: 10,000+ பணியிடங்கள்‌; 100+ நிறுவனங்கள்.. இளைஞர்களே உங்களுக்குதான் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!


விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க  https://palanimurugan.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php  என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும்.


முகவரி: இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழநி, திண்டுக்கல் – 624601


விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.01.2025


இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் https://palanimurugan.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.