சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், 2025- 2026ஆம் ஆண்டிற்கு மாதம் ரூ.14,000 உதவித் தொகையுடன் ITI தொழில் பழகுநர் பயிற்சி பெறுவதற்கு, 02.04.2025 அன்று மாநகர் போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சி பள்ளி, குரோம்பேட்டையில் நடைபெறும் சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம்.
மாணவர்களுக்கு மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை
மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், ஒரு வருடம் ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி பெற தகுதியான ஐடிஐ பிரிவுகளில் (Mechanic Motor Vehicle, Mechanic Diesel, Electrician, Auto Electrician, Fitter, Turner, Painter & Welder) தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மாதம் ரூ.14,000/- உதவித் தொகையுடன் தொழில் பழகுநர் பயிற்சி பெற முடியும்.
ஏப்ரல் 2 முதல் விண்ணப்பிக்கலாம்
இதற்கு, 02.04.2025 அன்று காலை 10:00 மணியளவில் மாநகர் போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சி பள்ளி, குரோம்பேட்டையில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்.
தொலைபேசி எண்: 9445030516
இலவச தொலைபேசி எண்: 149