மேலும் அறிய

புதுச்சேரிக்கு மெகா அறிவிப்பு: 2-வது ஐ.ஆர்.பி.என் பட்டாலியனுக்கு ஒப்புதல்; 1007 பேருக்கு அரசு வேலை!

சட்டம்-ஒழுங்கை பலப்படுத்தவும், பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்யவும் 2-வது இந்திய ரிசர்வ் பட்டாலியன் (IRBn - Indian Reserve Battalion) அமைக்க இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கை பலப்படுத்தவும், பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்யவும் 2-வது இந்திய ரிசர்வ் பட்டாலியன் (IRBn - Indian Reserve Battalion) அமைக்க இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் புதிதாக 1,007 பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, உள்ளூர் இளைஞர்களுக்கு பெருமளவில் வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளதாக முதல்வர் என். ரங்கசாமி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

கடந்த 2003ம் ஆண்டில், ஜனாதிபதி அனுமதியோடு, புதுச்சேரியில் இந்திய ரிசர்வ் பட்டாலியன்(ஐ.ஆர்.பி.என்) உருவாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, புதுச்சேரி அரசு 2004ம் ஆண்டில், அந்தப் பட்டாலியனுக்காக பல்வேறு நிலைகளில் மொத்தம் 1,007 பணியிடங்களை உருவாக்கியது. அதில், தற்போது, 896 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மக்கள்தொகை அதிகரிப்பு, விமான நிலைய உள்கட்டமைப்பு விரிவாக்கம், விரைவான தொழில்துறை வளர்ச்சி, சுற்றுலா நடவடிக்கைகளின் உயர்வு மற்றும் கடலோரப் பாதுகாப்பு தேவைகள் போன்ற பல்வேறு காரணங்களால், போலீஸ் துறை மனிதவளத் தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இதனை கருத்தில் கொண்டு, போலீஸ் துறைப் பணியாளர்களின் பற்றாக்குறையை தணிக்கும் வகையில் 2-வது இந்திய ரிசர்வ் பட்டாலியன் அமைக்க முதலமைச்சர் ரங்கசாமி பரிந்துரைத்தார். அதனடிப்படையில், ஆளுநர் முன் அனுமதியுடன், புதுச்சேரியில், 2-வது இந்திய ரிசர்வ் பட்டாலியனை அமைப்பதற்கான அனுமதி கோரி கடந்தாண்டு உள்துறை அமைச்சகத்திற்கு விரிவான திட்ட முன்மொழிவை சமர்ப்பித்தது. புதுச்சேரி அரசால் சமர்ப்பிக்கப்பட்ட இம்முன்மொழிவு மத்திய அரசால் முறையாக பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அடுத்து ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்துள்ளது. உள்துறை அமைச்சகத்தின் கடந்த 15ம் தேதி கடிதத்தின் மூலம் இது தெரிவிக்கப்பட்டது.

மேலும், 2வது இந்திய ரிசர்வ் பட்டாலியனை நிறுவுவதற்காக ஒருமுறை நிதியுதவி ரூ.50 கோடி வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இதனுடன், பட்டாலியனுக்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக செலவிடப்படும் ரூ.30 கோடி வரை, நடைமுறையில் உள்ள விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு, மத்திய அரசால் திருப்பிச் செலுத்தப்படும்.இரண்டாவது இந்திய ரிசர்வ் பட்டாலியன் உருவாக்கப்படுவதன் மூலம், பல்வேறு நிலைகளில் 1007 பணியிடங்கள் உருவாகும். உள்ளூர் இளைஞர்களுக்கு கணிசமான வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த அறிவிப்பு புதுச்சேரி இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

மத்திய அரசு வேலை வேண்டுமா? ஜூன் 17 முதல் இலவச பயிற்சி மற்றும் வாராந்திர மாதிரி தேர்வுகள் - உடனே பதிவிடுங்கள்!
மத்திய அரசு வேலை வேண்டுமா? ஜூன் 17 முதல் இலவச பயிற்சி மற்றும் வாராந்திர மாதிரி தேர்வுகள் - உடனே பதிவிடுங்கள்!
நாளை தவறவிட்டால் அப்புறம் வருத்தப்படுவீர்கள்! காஞ்சிபுரத்தில் 1000+ வேலைவாய்ப்புகள்!
நாளை தவறவிட்டால் அப்புறம் வருத்தப்படுவீர்கள்! காஞ்சிபுரத்தில் 1000+ வேலைவாய்ப்புகள்!
]இந்த படிப்பிருந்தால் போதும்... விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரியில் ஆய்வக நுட்புநர் வேலைவாய்ப்பு!
இந்த படிப்பிருந்தால் போதும்... விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரியில் ஆய்வக நுட்புநர் வேலைவாய்ப்பு!
JIPMER Recruitment 2026: ஜிப்மர் மருத்துவமனையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – மாதச் சம்பளம் ரூ.67,000 வரை!
JIPMER Recruitment 2026: ஜிப்மர் மருத்துவமனையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – மாதச் சம்பளம் ரூ.67,000 வரை!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Pink Police Booth : தமிழகத்திலேயே முதன்முறை! 24 மணி நேர கண்காணிப்பு..பொன்னேரியில் போலீஸ் பிங்க் பூத்
Caste Certificate Issue : அதிகாரிகள் அலட்சியம். ஊசலாடும் ராணுவ பணி கனவு? குடுகுடுப்பைகாரர் மகன் வேதனை!
Srivaikuntam TVK issue :
Kerala Baby: நடுரோட்டில் கைக்குழந்தை!அதிவேகத்தில் வந்த பேருந்து..நடத்துநர் மாஸ் சம்பவம்
TVK MLA Govt School | மகளுக்கு அரசுப் பள்ளியில் அட்மிஷன் ஆச்சர்யப்படுத்திய தவெக MLA வைரல் வீடியோ!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Alliance : ‘மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தடுத்து துரோகம்’ கூட்டணியில் இருந்து வெளியேறும் வைகோ..?
‘மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தடுத்து துரோகம்’ வெளியேறும் வைகோ..?
DMK TVK:
"48 வயசு குழந்தையை தூக்கி சுமக்கும் ஸ்டாலின்" பெண் MLA-விற்காக களமிறங்கிய தவெக பாய்ஸ்
தவெகவுக்கு தாவிய விஜயதரணி; காங். டூ பாஜக டூ TVK- காய் நகர்த்திய காரணம்!
தவெகவுக்கு தாவிய விஜயதரணி; காங். டூ பாஜக டூ TVK- காய் நகர்த்திய காரணம்!
DMK: சாதி, மத வாக்கு வங்கியை இழந்த திமுக..! மேலும் 3 பேரை நியமிக்க ஸ்டாலின் திட்டம் - அறிவாலய கணக்கு?
சாதி, மத வாக்கு வங்கியை இழந்த திமுக..! மேலும் 3 பேரை நியமிக்க ஸ்டாலின் திட்டம் - அறிவாலய கணக்கு?
ஆவின் பச்சைப் பால் விற்பனை ரத்து? மக்களை கடுமையாக பாதிக்கும்- அன்புமணி ஆவேசம்
ஆவின் பச்சைப் பால் விற்பனை ரத்து? மக்களை கடுமையாக பாதிக்கும்- அன்புமணி ஆவேசம்
Minister Ramesh: கோயில்களில் அடுத்த கொள்ளைக்கு முற்றுப்புள்ளி.. அமைச்சர் ரமேஷ் அதிரடி நடவடிக்கை.. மக்கள் மகிழ்ச்சி!
Minister Ramesh: கோயில்களில் அடுத்த கொள்ளைக்கு முற்றுப்புள்ளி.. அமைச்சர் ரமேஷ் அதிரடி நடவடிக்கை.. மக்கள் மகிழ்ச்சி!
Vijay BJP: CM விஜய்க்கு மெசேஜ் சொன்ன பாஜக..! டெல்லியில் தமிழர் மூலம் TVK பெற்ற அட்வைஸ்? காங்., நிலை?
CM விஜய்க்கு மெசேஜ் சொன்ன பாஜக..! டெல்லியில் தமிழர் மூலம் TVK பெற்ற அட்வைஸ்? காங்., நிலை?
Hyundai Kia Hybrid: பங்காளிங்க மொத்தமா வரோம்..! ரெண்டு 7 சீட்டர்கள் உட்பட 4 ஹைப்ரிட் கார்கள் - மைலேஜ், விலை?
பங்காளிங்க மொத்தமா வரோம்..! ரெண்டு 7 சீட்டர்கள் உட்பட 4 ஹைப்ரிட் கார்கள் - மைலேஜ், விலை?
Embed widget