மேலும் அறிய
மதுரை இளைஞர்களே...வேலைவாய்ப்பு முகாம்: 17.10.2025-ல் உங்கள் கனவுப் பணிக்கு ஒரு படி!
மதுரை வேலை வாய்ப்பு முகாமில் தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு கல்வித்தகுதிக்கேற்ப வேலைநாடும் இளைஞர்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.

job fair
அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறும், இம்முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதனால் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எவ்விதத்திலும் பாதிக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் வேலை வாய்ப்பு முகாம்
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 17.10.2025 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. இம்முகாமில் தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு கல்வித்தகுதிக்கேற்ப வேலைநாடும் இளைஞர்களைத் தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு தங்களது தகுதிக்கேற்ப தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுக் கொள்ளலாம். வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிக்கும் நிறுவனங்கள் http://www.tnprivatejobs.tn. gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களைப் பதிவேற்றம் செய்து பயன் பெறலாம்.
அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது
இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் 17.10.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு மதுரை, கோ.புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறும், இம்முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதனால் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எவ்விதத்திலும் பாதிக்காது எனவும் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய, துணை இயக்குநர் அவர்கள் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வேலைவாய்ப்பு செய்திகளைத் (Tamil Employment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















