கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்


ஆய்ஷ் மருத்துவ அலுவலர் (NRHM Scheme) - 2


ஆயுஷ் மருத்துவர் (NAM Shceme) -2


சித்தா மருந்தாளுநர்  (Pharmacist) - 1


மருந்து வழங்குபவர் - 8


சிகிச்சை உதவியாளர் -2


பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் -10


ஆய்வக நுட்புநர் (நிலை-2) - 12


மொத்த பணியிடங்கள் - 37


கல்வி மற்றும் பிற தகுதிகள்



  • ஆயுஷ் மருத்துவ அலுவலர், ஆயுஷ் மருத்துவ அலுவலர்  பணிக்கு BSMS/BHMS படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • சித்தா மருந்தாளுநர், மருந்து வழங்குபவர் பணிக்கு D.Pharm படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • சிகிச்சை உதவியாளர் பணிக்கு Nursing
    Therapist துறையில் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் பணிக்கு 8- வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

  • ஆய்வக நுட்புநர் பணிக்கு DMLT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு விவரம்


இதற்கு விண்ணப்பிக்க 18 வயது நிரம்பியவராகவும் 59 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 


ஊதிய விவரம் 


ஆயுஷ் மருத்துவ அலுவலர் - ரூ.34,000/-


ஆயுஷ் மருத்துவர் (NAM Shceme) -ரூ.40,000/-


சித்தா மருந்தாளுநர்  - ரூ.22,500/-


மருந்து வழங்குபவர் - ரூ.750/ நால் ஒன்றுக்கு..


சிகிச்சை உதவியாளர் - ரூ.15,000/-


பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் - ரூ.300/ நாள் ஒன்றுக்கு..


ஆய்வக நுட்புநர் (நிலை-2) - ரூ.13,000/-


விண்ணப்பிக்கும் முறை 


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் அஞ்சல் அல்லது நேரில் சென்று விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.


கீழ்கண்ட சான்றிதழ்களின் நகல் இணைக்கப்பட வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.



  • 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

  • 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

  • பட்ட/பட்டய படிப்பிறகான சான்றிதழ் மற்றும் பதிவு செய்த சான்றிதழ்

  • சாதிச் சான்றிதழ்

  • முன்னுரிமை சிறப்பு சான்றிதழ்கள் (ஏதுமிருப்பின்)


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி 


துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள்,


மாவட்ட ஆட்சியரகம் பின்புறம், வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில்,


இராமபுரம் அஞ்சல், கிருஷ்ணகிரி - 635115


விண்ணப்பிக்க கடைசி நாள் - 21.02.2024


https://cdn.s3waas.gov.in/s37eacb532570ff6858afd2723755ff790/uploads/2024/02/2024021219.pdfஎன்ற இணைப்பை க்ளிக் செய்து வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் தகவல்களை காணலாம்.