கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் காலியாக உள்ளஅலுவலக உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பணி விவரம்


அலுவலக உதவியாளர்


பணியிடம்


தியாகதுருகம் ஊராட்சி


கல்வித் தகுதி:


இதற்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


மிதிவண்டி மற்றும் இருசக்கர மோட்டார் வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். 


வயது வரம்பு


இதற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18-வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு பற்றிய விவரங்களை அதிகாட்ரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.


ஊதிய விவரம்:


இதற்கு மாத ஊதியமாக ரூ.15,700 - ரூ.58,100 வழங்கப்படும். 


விண்ணப்பிப்பது எப்படி?


https://cdn.s3waas.gov.in/s3c7e1249ffc03eb9ded908c236bd1996d/uploads/2023/12/2023120469.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்து கொள்ளவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். 


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி


ஊராட்சி ஒன்றிய அலுவலகம்


தியாகதுருகம் 


கள்ளக்குறிச்சி -606206


விண்ணப்பிக்க கடைசி தேதி - 20.12.2023


https://cdn.s3waas.gov.in/s3c7e1249ffc03eb9ded908c236bd1996d/uploads/2023/12/2023120471.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து கூடுதல் விவரங்களை அறியலாம்.


திருப்பூர் மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்


அலுவலக உதவியாளர்


பணி இடம்


திருப்பூர்,வெள்ளகோவில், ஊத்துக்குளி, பொங்கலூர், பல்லடம், மூலனூர், மடத்துக்குளம்,குண்டடம், காங்கேயம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள அலுவலகங்களில் காலியா உள்ள பணியிடங்கள் இந்த அறிவிப்பு மூலம் நிரப்பட உள்ளன. 


கல்வித் தகுதி


இதற்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.


வயது வரம்பு:


01.07.2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:


விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்னப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அஞ்சல் மூலமாகவோ சமர்பிக்க வேண்டும்.


விண்ணப்ப படிவத்தினை தரவிறக்கம் செய்ய https://tiruppur.nic.in/notice_category/recruitment/page/2/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும். 


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி


ஆணையாளர்,


ஊராட்சி ஒன்றியம்,


வெள்ளகோவில்,


திருப்பூர்.


ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் விண்ணப்பிக்கும்போது அந்த முகவரியில் அஞ்சல் அனுப்ப வேண்டும். முகவரி குறித்த விவரங்களுக்கு https://tiruppur.nic.in/notice_category/recruitment/page/2/ -என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும். 


விண்ணப்பிக்க கடைசி தேதி - 26.12.2023 மாலை 5.45 மணிக்குள்..