மத்திய அரசின் கீழ் செயல்படும் கலாஷேத்ரா அறக்கட்டளையின் Rukmini Devi College of Fine Arts கல்லூரியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


பணி விவரம்


பரதநாட்டியம் - 5


வாய்ப்பாட்டு - கர்நாடக இசை  - 6


வீணை - கர்நாடக இசை - 2


மிருந்தங்கம் - கர்நாடக இசை -3


வயலின் - கர்நாடக இசை - 1


மொழிப்பாடம் - ஆசிரியர் - 4 
(தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, சமஸ்கிருதம்)


கல்வித் தகுதி:


பரதநாட்டியம் பணிக்கு விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை டிப்ளமோ படித்திருக்க வேண்டும். 5 ஆண்டுகள் பயிற்றுவிப்பதில் அனுபவம் இருக்க வேண்டும். 


வாய்ப்பாட்டு, வீணை, வயலின், மிருந்தங்கம் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்க சமபந்தப்பட்ட துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். 


தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய பணிகளுக்கு மொழிப்பாடத்தில் இளங்கலை அல்ல்து முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 


இது ஒப்பந்தம் அடிப்படையிலானது, பணி நிரந்தரம் செயப்படாது என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


ஊதிய விவரம்


பரதநாட்டியம் - ரூ.20,000 - ரூ.36,000/-


வாய்ப்பாட்டு - கர்நாடக இசை  - ரூ.20,000 - ரூ.36,000/-


வீணை - கர்நாடக இசை - ரூ.20,000 - ரூ.36,000/-


மிருந்தங்கம் - கர்நாடக இசை -ரூ.20,000 - ரூ.36,000/-


வயலின் - கர்நாடக இசை - ரூ.20,000 - ரூ.36,000/-


மொழிப்பாடம் - ஆசிரியர் - ரூ.15,000 - ரூ.20,000/-


வயது வரம்பு விவரம்:


இதற்கு விண்ணப்பிக்க 60 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 


விண்ணப்பிக்கும் முறை:


கலா‌ஷேத்ராவின் அதிகாரப்பூர்வ https://www.kalakshetra.in/ - இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்ய வேண்டும். அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகல்களை அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.


தெரிவு செய்யப்படும் முறை:


இதற்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்தெடுக்கப்படுவர். 


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி 


Director, Kalakshetra Foundation, 
Thiruvanmiyur, 
Chennai - 600 041


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி - 31.05.2024


இது தொடர்பான கூடுதல் விவரங்கள், விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்ய https://kalkbuckmedi21.s3.ap-south-1.amazonaws.com/2024/05/Advertisment-for-filling-up-faculty-positions-on-contract-basis-for-the-AY-2024-2025.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.