திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து (நாளை) 21-11-2025 (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது.

Continues below advertisement

திருவண்ணாமலையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்!

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், வரும் நவம்பர் 21-ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதாக மாவட்ட கலெக்டர் சிபி தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

வேலை வாய்ப்பு முகாம் விவரங்கள் 

நாள்:  21-11-2025, (வெள்ளிக்கிழமை )நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை.இடம் : மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வளாகம், திருவண்ணாமலை.

இம்முகாமில் 30க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட காலிபணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

கல்வித் தகுதி 

8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடித்தவர்கள்.ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ., பி.டெக்., படிப்பு முடித்தவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை

முகாம் அன்று தங்களுடைய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ரேஷன், ஆதார்அட்டை, சாதிச்சான்று, கல்விதகுதி சான்றிதழ்களின் நகலுடன் முகாமில் கலந்து கொள்ள வேண்டும் 

வேலை தேடும் ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து இந்த முகாமில் பங்கேற்றுப் பயன் பெறலாம்.

திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.