பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு: MSME பிரிவில் 419 காலிப் பணியிடங்கள்! விண்ணப்பிக்க கடைசி தேதி நெருங்குது!
பரோடா வங்கியில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பிரிவில் உள்ள மேனேஜர், உதவி மேனேஜர், இணை மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
பரோடா வங்கியில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பிரிவில் உள்ள மேனேஜர், உதவி மேனேஜர், இணை மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இப்பணியிடங்களுக்கு https://bankofbaroda.bank.in/career/current-opportunities என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2026
பணியின் விவரங்கள்,பதவியின் பெயர், எண்ணிக்கை, வயது வரம்பு விபரம் பின்வருமாறு,
உதவி துணை தலைவர் 14 பேர் வயது. 26 முதல் 36 வயது வரை
டெபியூட்டி மேனேஜர் 62 பேர். வயது 24 முதல் 34 வயது வரை
உதவி மேனேஜர் 177 பேர். வயது 22 முதல் 32 வயது வரை
சீனியர் மேனேஜர் 132 பேர். 29 முதல் 40 வயது வரை
மேனேஜர் 34 பேர். வயது 25 முதல் 34வரை
மொத்தம் - 419 பேருக்கான பணியிடங்கள்
MSME பிரிவில் தற்காலிக முறையில் 253 காலிப்பணியிடங்கள், முழு நேர பிரிவில் 166 இடங்களும் நிரப்பப்படுகிறது.தகுதிகள் என்னென்ன?
MSME உறவுகள், சேல்ஸ் பிரிவில் உள்ள உதவி துணை தலைவர், டெபியூட்டி மேனேஜர் மற்றும் உதவி மேனேஜர் பதவியில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் எம்பிஏ, மார்க்கெட்டிங் அல்லது நிதியில் பிஜி டிப்ளமோ முடித்தவர்கள் எதிர்பார்க்கப்படுகிறார்கள். இப்பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 2 முதல் அதிகபடியாக 5 வருடங்கள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
சீனியர் மேனேஜர், மேனேஜர் ஆகிய பதவிகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். CA/CFA/CMA அல்லது எம்பிஏ/ நிதி, சேல்ஸ், மார்க்கெட்டிங், பேங்கிங் ஆகியவற்றில் பிஜி டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் 8 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
01.01.2026 தேதியின்படி, கட்-ஆஃப் தகுதி நிர்ணயிக்கப்படுகிறது.
ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும் இடங்களுக்கு கல்வித்தகுதி, அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயிக்கப்படும்.
இதர பதவிகளுக்கு ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை ஊதியம் வழங்கப்படும்.
பரோடா வங்கியில் உள்ள இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு, குழு கலந்துரையாடல் அல்லது நேர்காணல் ஆகியவை நடைபெறும் என தெரிவிகப்பட்டுள்ளது. விண்ணப்பங்களின் எண்ணிக்கை அடிப்படையில் தேர்வு செய்யப்படும் முறை வங்கி தேர்வு குழுவின் மூலம் முடிவெடுக்கப்படும்.
ஆன்லைன் தேர்வு நடத்தப்பட்டால், காரணி, ஆங்கிலம், நுண்ணறிவு, பணிக்கான பொது அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் 150 கேள்விகள் இடம்பெறும். அதிகபடியாக மொத்தம் 225 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.
பரோடா வங்கியில் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://bankofbaroda.bank.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.175 செலுத்த வேண்டும்.
முக்கிய நாட்கள்,விவரம் தேதிகள் பின்வருமாறு,
விண்ணப்பம் தொடக்கம் - 06.02.2026
விண்ணப்பிக்க கடைசி நாள் - 26.02.2026
ஆன்லைன் தேர்வு அல்லது நேர்காணல் பின்னர் அறிவிக்கப்படும்.
பரோடா வங்கியில் வழங்கப்படும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் உரிய ஆவணங்களுடன் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். வங்கி துறையில் பணி செய்பவர்களுக்கு இது நல்ல வாய்ப்பாகும். குறிப்பாக MSME துறையின் பணி அனுபவம் கொண்டவர்கள் பரோடா வங்கி வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.























