நெடுஞ்சாலைத் துறையில் அரசு வேலை; 8 ஆம் வகுப்பு படித்தால் போதும்... முழுவிவரம் உள்ளே !
தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது

திருநெல்வேலியில் தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது, 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையில் வேலை வாய்ப்பு
திருநெல்வேலியில் தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத் துறையில் ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் திருநெல்வேலி நெடுஞ்சாலை வட்டத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23.10.2025க்குள் விண்ணபிக்கலாம்.
காலியிடங்களின் விவரம்:
ஓட்டுநர் பணியிடம் - 1
கல்வித் தகுதி:
இந்தப் பணியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகனம் அல்லது இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் பதவிக்கு 2 ஆண்டுகள் கனரக வாகனம் இயக்கிய அனுபவச் சான்று வைத்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
01.07.2025 அன்று 30 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இருப்பினும் தமிழக அரசு விதிகளின் எஸ்.டி, பிரிவினர் 35 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ. 19,500 முதல் 71,900 வரை.
அலுவலக உதவியாளர் பணி
அலுவலக உதவியாளர் - 1
கல்வித் தகுதி:
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி:
01.07.2025 அன்று 30 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இருப்பினும் தமிழக அரசு விதிகளின் எஸ்.டி, பிரிவினர் 35 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ. 15,700 முதல் 58,100 வரை.
தேர்வு முறை:
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.10.2025
விண்ணப்பம் அனுப்பவேண்டிய அஞ்சல் முகவரி:
ஓட்டுநர் பதவிக்கு: கண்காணிப்பு பொறியாளர், நெடுஞ்சாலை க(ம)ப, ஏ.ஆர்.லைன் ரோடு, திருநெல்வேலி - 627002. அலுவலக உதவியாளர் பதவிக்கு: கோட்டப் பொறியாளர், நெடுஞ்சாலை க(ம)ப, ஏ.ஆர்.லைன் ரோடு, திருநெல்வேலி - 627002





















