விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட ஊராட்சி ஓன்றியங்களில் காலியாக உள்ள ஓட்டுநர், அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடு.

Continues below advertisement

ஊராட்சி ஓன்றியங்களில் காலியாக பணியிடங்கள் நிரப்புதல்

விழுப்புரம் மாவட்ட ஊராட்சி ஓன்றியங்களில் காலியாக உள்ள ஓட்டுநர், அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 12 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 20.11.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

ஈப்பு ஓட்டுநர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

Continues below advertisement

முகையூர் – 1, காணை – 1,  திருவெண்ணெய்நல்லூர் – 1, கண்டமங்கலம் – 1, வானூர் – 1

கல்வித் தகுதி:

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மோட்டார் வாகனச் சட்டத்தின்படி தகுதியான அலுவலரால் வழங்கப்பட்ட செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : இந்த பணியிடங்களுக்கு 01.07.2025 அன்று 18 வயது முதல் 42 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ.19,500 முதல் 71,900 வரை வழங்கப்படும்.

அலுவலக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

திருவெண்ணெய்நல்லூர் – 1, மேல்மலையனூர் – 1

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : இந்த பணியிடங்களுக்கு 01.07.2025 அன்று 18 வயது முதல் 42 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.15,700 – 58,100

இரவுக் காவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

காணை – 1, கோலியனூர் – 1, கண்டமங்கலம் – 1, வல்லம் – 1, மேல்மலையனூர் – 1

கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : இந்த பணியிடங்களுக்கு 01.07.2025 அன்று 18 வயது முதல் 42 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.15,700 முதல் 58,100 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://viluppuram.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து பூர்த்தி செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களின் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கட்டணம்: ரூ. 50, சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களின் பெயரில் வங்கி வரைவோலையாக விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும். 20.11.2025 தேதிக்குள் விண்ணபிக்க வேண்டும்  இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://viluppuram.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினை பார்க்கலாம்.